ஹைலைட்ஸ்:
- சபாபதி படத்தில் நடித்த புகழ்
- சந்தானத்தை புகழ்ந்த புகழ்
என்னை வச்சு செஞ்சுடுவாரோனு நினைச்சேன். ஆனால் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டார் என சந்தானம் பற்றி பெருமையாக பேசினார் புகழ்.
இந்நிலையில் சபாபதி படம் பார்த்தவர்களோ, புகழை வேஸ்ட் செய்துவிட்டார் சந்தானம். ஓரிரு காட்சிகளில் தான் புகழ் வருகிறார். அவரால் அரங்கமே அதிரும் என்று எதிர்பார்த்தால் இப்படி சப்பையாகிவிட்டது.
என்னையும், புகழையும் எதிர்பார்த்து தியேட்டருக்கு வராதீர்கள் என்று சபாபதி பட செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் சொன்னது அப்போ புரியல, இப்போ தான் புரியுது என்கிறார்கள் ரசிகர்கள்.
புகழ் அடுத்ததாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஹீரோவாக நடித்து வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் அஸ்வினும், புகழும் சேர்ந்து நிச்சயம் சிரிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார் புகழ். அதனால் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்துவிட்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.