Home Sports விளையாட்டு செய்திகள் Delhi High Court quashes FIR against sasikala pushpa | சசிகலாவுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

Delhi High Court quashes FIR against sasikala pushpa | சசிகலாவுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

0

[ad_1]

புதுடெல்லி, ஜூன் 28: திருமண சர்ச்சையைத் தொடர்ந்து முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா ராமசாமி மற்றும் அவரது கணவர் டாக்டர் பி ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு எஃப்.ஐ.ஆர்களை தில்லி உயர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) ரத்து செய்தது.

ஜூன் 15 ம் தேதி நீதிபதி சி.ஹரிசங்கரிடம், இரு தரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு ஏற்பட்டதாகவும், அவர்கள் ஒன்றாக வசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரத்தைத் தொடர இனி எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2018 இல் திருமணம் செய்துகொண்ட சசிகலா மற்றும் ராமசாமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு தனித்தனி எஃப்.ஐ.ஆரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

ALSO READ |  அதிர்ச்சி! தடையை மீறி சசிகலா 2வது திருமணம்! வீடியோ உள்ளே!!

சசிகலாவை மூத்த வழக்கறிஞர் ஜே பி செங் மற்றும் வழக்கறிஞர் சாரு சவுத்ரி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர். அதேபோல ராமசாமி வழக்கறிஞர் ராகவ் சர்மா மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார்.

2016 ல் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சசிகலா பாரதிய ஜனதா கட்சியில் (BJP) சேர்ந்தார்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றங்களுக்காக சசிகலா மீது வடக்கு அவென்யூ காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதேபோல பெண்ணுக்கு காயத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படும் குற்றங்களுக்காக ராமசாமிக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மேயராக இருந்த சசிகலா புஷ்பா, கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு   செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை அடித்து துன்புறுத்தியதாக மாநிலங்களவையில் கதறி அழுதுக்கொண்டே கூறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  நாய் போல போயஸ் கார்டனில் வைக்கப்பட்டேன் வெளியேற்றப்பட்ட சசிகலா புஷ்பா பேட்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here