இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘சிவா மனசுல சக்தி ’என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எம் ராஜேஷ் அதன்பின்னர் ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்பட ஒருசில வெற்றி படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம் ராஜேஷ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படம் எம் ராஜேஷின் ’சிவா மனசுல சக்தி’ ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ போல காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் மூலம் மீண்டும் எம் ராஜேஷ் ஒரு வெற்றிப்படத்தை தருவார் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம்ரவி ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு மீண்டும் இயக்குனர் கல்யாண இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.