HomeSportsவிளையாட்டு செய்திகள்Do you know how to enroll you in CMCHISTN, Tamil Nadu goverments...

Do you know how to enroll you in CMCHISTN, Tamil Nadu goverments free medical insurance | CMCHISTN:தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் எப்படி சேர்வது?


சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மருத்துவ செலவுகள் கையை கடிக்கும் நிலையில், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது.

அதிலும் செப்டம்பர் மாதம் கோவிட்-19 (covid19) மூன்றாவது அலை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதிப்பு நிலவரம் எப்படி இருக்கும்? இரண்டாம் அலையை விட வீரியமாக இருந்தால் என்ன செய்வது என்ற கவலைகள் அதிகரித்துவிட்டன. நோய் பரவல் ஒரு புறம் என்றால், அதை எதிர்கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது மிகவும் அவசியமானது.

எனவே, அனைவரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவரை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்கள், தற்போது உறுப்பினராக வேண்டுமென்றால் என்ன செய்வது? இந்த கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. அது மிகவும் சுலபமானது தான்… 

Also Read | கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்குமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!

அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் VAO விடம் கையெழுத்து வாங்கிய பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.  அங்கு அதை பெற்றுக் கொண்டு, காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு, பதிவு எண்ணை கொடுப்பார்கள். பிறகு ஒரு சில தினங்களில் உங்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் உறுப்பினர் அட்டை வீடு வந்து சேரும்.

அட்டை கைக்கு வரவில்லை என்றாலும் கவலைப்படவேண்டாம். பதிவு செய்யப்பட்ட எண்ணைக் கொடுத்தால், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை தர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்கான திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஆகும்.

Also Read | Post Covid: அதிகமாக முடி உதிர்கிறதா? கொரோனா சிகிச்சை பெற்றவரா? இது உங்களுக்கான தீர்வு

அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 நோய் அறிதல் கண்டுபிடிப்பு பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. 

பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read | நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா?

அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்காக அரசு செலவுகளை செய்யும். சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் கட்டணமில்லா உதவி மையம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகிறது. 1800 425 3993 என்ற தொலைபேசி எண் மூலம் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து உங்கள் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதி செய்துக் கொள்ளவும். 

Also Read | பருக்களை மாயமாக்கி, சருமத்தை ஒளிரச் செய்யும் எண்ணெய்! இதுதான்…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read