Home Sports விளையாட்டு செய்திகள் #EURO2020 யூரோ கோப்பை: 29 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற டென்மார்க்: செக்குடியரசு பரிதாபத் தோல்வி | Denmark beat Czech Republic to enter Euro Cup semi-finals after 29 years

#EURO2020 யூரோ கோப்பை: 29 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற டென்மார்க்: செக்குடியரசு பரிதாபத் தோல்வி | Denmark beat Czech Republic to enter Euro Cup semi-finals after 29 years

0

[ad_1]


29 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு டென்மார்க் அணி தகுதிபெற்றுள்ளது.

அரையிறுதியில் இங்கிலாந்துடன் பலப்பரிட்சை நடத்துகிறது டென்மார்க் அணி.

பகு நகரில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் நேற்று நடந்த யூரோ கோப்பை காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை டென்மார்க் அணி உறுதி செய்தது.



டென்மார்க் அணியின் தாமஸ் டிலானே, காஸ்பர் டோல்பெர்க் இருவரும் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். கடந்த 1992-ம் ஆண்டு யூரோகோப்பை சாம்பியனான டென்மார்க் அணி அதன்பின் ஒருமுறை கூட அரையிறுதிவரை முன்னேறவில்லை, 29 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக மீண்டும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து டென்மார்க், செக்குடியரசு அணியின் வீரர்கள் பந்தை ஆக்ரோஷமாக மாறி, மாறி கடத்தினர். ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டிலானே கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் படுத்தினார்.

ஆட்டத்தின் முதல்பாதி முடிய 3 நிமிடங்கள் இருக்கும் போது, 42 நிமிடத்தில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் கோல் அடித்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வலுவாகக் கொண்டு சென்றார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வலுவாக இருந்தது. ஆட்டத்தின் 2-வது பாதியில் 2 கோல்கள் அடித்து சமன் செய்ய வேண்டிய நெருக்கடிக்கும், அழுத்ததுக்கும் செக்குடியரசு வீரர்கள் ஆளானார்கள்.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் அதாவது 49-வது நிமிடத்தில் செக்குடியரசு வீரர் பாட்ரிக் ஹிக் தனது வலது காலில் அடித்த பலமான ஷாட் கோலாக மாற்றி, செக்குடியரசு அணிக்கு கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.

ஆனால், அதன்பின் சுதாரித்து ஆடிய டென்மார்க் அணி வீரர்கள், தடுப்பாட்டத்தைக் கையாண்டு, கடைசிவரை செக்குடியரசு வீரர்களை கோல் அடிக்க அனுமதிக்கவில்லை. பலமுறை செக்குடியரசு வீரர்கள் பந்தை கோல்அடிக்க கொண்டு சென்றபோதிலும் அதை டென்மார்க் வீரர்கள் லாவகமாகத் தடுத்தனர். கடைசி வரை டென்மார்க் அணிக்கு இணையாக கோல் கணக்கை செக்குடியரசு அணியால் கொண்டுவரஇயலவில்லை.

இதனால் ஆட்டம் நேர முடிவில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தையடுத்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதல் நடத்துகிறது டென்மார்க்அணி.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here