Thursday, December 2, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்Farmers chase away Puducherry director of agriculture | வேளாண்துறை இயக்குநரை விவசாயிகள் விரட்டி...

Farmers chase away Puducherry director of agriculture | வேளாண்துறை இயக்குநரை விவசாயிகள் விரட்டி அடித்ததால் பரபரப்பு!


கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் புதுச்சேரியில் 7000 ஏக்கர் விலைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு முக்கிய சாலைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று மாலை புதுச்சேரி வந்தனர், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய அவர்கள், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை தனிதனியே சந்தித்து பேசி மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். 

அதனைத் தொடர்ந்து இன்று காலை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். முதலாவதாக பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்திற்கு சென்ற மத்திய குழுவினர் அங்கு மழை மற்றும் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். 

இதேபோல் இந்திராகாந்தி சதுக்கத்தில் ஏற்பட்ட சாலை பாதுகாப்புகள், இடையார்பாளையம் என்.ஆர்.நகர் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர்கள் புதுச்சேரியின் நெல் களஞ்சியம் என்றழைக்கப்படும் பாகூர் பகுதிக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.

Puducherry director of agriculture

மேலும் பாகூர் பகுதிக்கு மத்திய குழுவினருடன் வந்த புதுச்சேரி வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தியை மட்டும் அப்பகுதி விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தொடர்ந்து ஆய்வு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தி கலைய செய்தனர். இதனையடுத்து மத்திய குழுவினர் முள்ளோடை பகுதியை ஆய்வு செய்த பின்னர் கடலூர் புறப்பட்டு சென்றனர். 

மத்திய குழுவினருடன் வந்த வேளாண்துறை இயக்குநரை ஆய்வு செய்யவிடாமல் விவசாயிகள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

inspect with the Central Committee

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

zeenews.india.com

Zee News Tamil

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Valimai: ‘வலிமை’ அப்டேட் குறித்து இணையத்தில் கசிந்த தகவல்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள்! – ajith...

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை அண்மையில்...