Homeசினிமா செய்திகள்Fed Up Of Hypersexualisation Female Athletes Are Finally Taking Matters Into Their...

Fed Up Of Hypersexualisation Female Athletes Are Finally Taking Matters Into Their Own Hands – தமிழ் News


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் போட்டிக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிகினி உடையை அணியாமல் உடலை மறைக்கும் முழுநீள உடையை அணிந்து விளையாடியதால் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இதபோன்று கடந்த வாரம் பல்கேரியாவில் நடைபெற்ற ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே நாட்டு வீராங்கனைகளும் தாங்கள் அணியவேண்டிய பிகினி உடைக்கு மாற்றாக ஷார்ட்ஸ் அணிந்து விளையாடினார். போட்டிக்கு முன்பே தங்களது ஆடை தேர்வு குறித்து அந்த வீராங்கனைகள் போட்டிக் குழுவிற்கு தெரிவித்து இருந்தனர். ஆனாலும் ஹேண்ட்பால் போட்டிக்கு உரிய டிரஸ் கோடை(பிகினி) அவர்கள் அணியாத காரணத்தால் ஐரோப்பிய கைப்பந்து கழகம் அவர்களுக்கு அபராதம் விதித்து இருக்கிறது.

இதையடுத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு இடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பரபரப்பு டோக்கியோ ஒலிம்பிக்கிலும் எதிரொலிக்கத் துவங்கி இருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வீராங்கனைகள் நாங்கள் திறமையை காட்டவே விளையாடுகிறோம். இதில் எங்களுடைய உடல் வனப்பை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் எங்களுடைய உடை தேர்வு என்பது எங்களுடைய உரிமையாக இருக்க வேண்டும். இதனால் பாரம்பரிய உடைத்தேர்வில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர்.

விளையட்டு போட்டியில் கலந்துகொள்ளும் ஆண் தடகள வீரர்கள் தங்கள் உடல்வாகுக்கு ஏற்றபடி அரைகால் உடையோ அல்லது முழுகால் உடையோ தேர்வு செய்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. அதோடு பீச் ஹேண்ட்பால், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு அவர்களின் உடல்முழுக்க தெரியும்படி பிகினி உடையே கொடுக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து இருப்பதாகக் வீராங்கனைகள் குற்றச்சாட்டத் துவங்கியுள்ளனர்.

கடந்த 2016 வாக்கில் அமெரிக்காவில் உள்ள 300 க்கும் மேற்பட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு இதுபோன்ற பாலியல் தொந்தரவு இருந்ததாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் பிகினியை அணியாமல் காலுக்கு கீழே உடல் முழுவதும் மறைக்கும் வகையில் உள்ள முழுநீள உடையை அணிய விரும்புவதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பாரம்பரியமாக ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒவ்வொரு விதிமுறைகளை விளையாட்டுக் கழகம் பின்பற்றி வருகிறது. இந்த விதிமுறைகளை மீறும்போது வீராங்கனைகளுக்கு அவர்கள் அபராதத்தை விதித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நார்வே நாட்டு வீராங்கனைகள், ஜெர்மனி வீராங்கனைகள் போன்றோர் தங்களது ஆடைத் தேர்வில் எதிர்ப்பை காட்டி வேறு உடைகளை அணிந்து விளையாடத் துவங்கியுள்ளனர்.

இதனால் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவிற்கு அவர்கள் வந்திருப்பது குறித்து பலரும் அவர்களுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் வசதிக்கு ஏற்பட உடைகள் இருக்க வேண்டுமே தவிர கவர்ச்சிக் காட்டும் வகையில் உடை இருக்கக்கூடாது என்ற விமர்சனமும் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பிகினி உடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்ப்பாப்பும் ஏற்பட்டு இருக்கிறது. 

Vi er kjempestolte over disse jentene som under EM hevet stemmen og ga beskjed om at NOK ER NOK! Vi i NHF står bak dere og støtter dere. Sammen skal vi fortsette å kjempe for å endre regelverket for bekledning, slik at spillerne får spille i det tøyet de er komfortable med! pic.twitter.com/MmfiMtVz2Q

— Norges Håndballforbund (@NORhandball) July 20, 2021





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read