Home Sports விளையாட்டு செய்திகள் Good news bus fares will not increase in Tamil Nadu assures Minister Rajakannappan | பேருந்து கட்டணங்கள் உயராது: பயணிகளுக்கு நல்ல செய்தி அளித்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

Good news bus fares will not increase in Tamil Nadu assures Minister Rajakannappan | பேருந்து கட்டணங்கள் உயராது: பயணிகளுக்கு நல்ல செய்தி அளித்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

0
Good news bus fares will not increase in Tamil Nadu assures Minister Rajakannappan | பேருந்து கட்டணங்கள் உயராது: பயணிகளுக்கு நல்ல செய்தி அளித்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

[ad_1]

இந்தியா முழுவதும் கடந்த பல நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழகத்திலும் இந்த விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், பல அத்தியாவசிய சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழக மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் உள்ள போதிலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவன பயிற்சி மையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

ALSO READ: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: ஜூலை 16 முக்கிய ஆலோசனை

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவின் பேரில், அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்ததால் பேருந்துகளில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 6 ஆயிரத்தில் இருந்து 7,291 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 700 பேருந்துகளில், தற்போது 15 ஆயிரத்து 627 பேருந்துகள் கட்டம் கட்டமாக இயக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் அறிவுறைப்படி, குளிர்சாதன வசதி இல்லாமல் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 2 ஆயிரத்து 650 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசின் (Central Government) நிர்பயா திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக்கழகத்தை சேர்ந்த 2,800 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து டவுன் பஸ்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும். 

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போனாலும், பொதுமக்களின் நலன் கருதி பேருந்து கட்டணம் (Bus Fare) உயர்த்தப்படாது. ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் விகிதம் ஒரு பேருந்துக்கு 2.92 என்று இருந்தது. தற்போது இது .62 என்ற விகிதத்தில் குறைந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 364  பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கும் பேருந்துகளை (Government Buses) இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் பள்ளி, கல்லூரி வாகனங்கள் நிச்சயமாக புதுப்பிக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.” என்று கூறினார். 

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அமைச்சர் உறுதி அளித்திருப்பது பொது மக்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.

ALSO READ: Bus Fare: அதிகரிக்கிறதா பஸ் டிக்கெட் கட்டணம்? அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here