Home Sports விளையாட்டு செய்திகள் Good News! TN government announced that there is no need for Differently abled students write 12th sub-exam!| TN Govt: 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுதாமலேயே தேர்ச்சி

Good News! TN government announced that there is no need for Differently abled students write 12th sub-exam!| TN Govt: 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுதாமலேயே தேர்ச்சி

0
Good News! TN government announced that there is no need for Differently abled students write 12th sub-exam!| TN Govt: 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுதாமலேயே தேர்ச்சி

[ad_1]

சென்னை: 12ஆம் வகுப்பிற்கான துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கோவிட் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. அதெபோல், ஆகஸ்டு மாதம் நடைபெறவிருக்கும் துணைத்தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2016 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17(i)-இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 

தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்களாகவே விரும்பினால், தேர்வினை எழுதலாம். 

தங்களது சுயவிருப்பத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள், பிறகு இந்த அரசாணையின் அடிப்படையில் விலக்கு கோரமுடியாது என்று மாநில அரசின் ஆணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

Also Read | 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் துவங்கியது

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது துணைத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு, அவர்கள் எழுதும் துணைத்தேர்வின் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று (Coronavirus) அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு அறிவித்தது.

மதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.  

ALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here