Monday, September 26, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

House Broker Make A Posters Commission Free For Ghost Houses In Theni | பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் – தேனியில் திகில் கிளப்பிய போஸ்டர்கள்


ஒரு மனிதருக்கு வீடு அத்தியாவசியம். பலருக்கு சொந்த வீடு கனவு இருந்தாலும் பெரும்பாலும் வாடகை வீட்டில் வசிக்கும் நிலையே உருவாகிறது. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பிடித்துக்கொடுக்க புரோக்கர்கள் இருக்கிறார்கள்.

ஒரு மாத வாடகை கமிஷனாக வாங்குவது, இல்லை குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வாங்கிக்கொள்வது என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்டண முறை இருக்கிறது.

தற்போது வீடு பிடித்துக்கொடுக்கும் புரோக்கர்கள் விளம்பரப்படுத்திக்கொள்வதிலும் மும்முரமாக இருக்கின்றனர். அப்படி விசிட்டிங் கார்டு கொடுப்பது உள்ளிட்ட செயல்களை அவர்கள் செய்துவருகின்றனர். ஆனால் தேனியில் வீடு புரோக்கர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் விசித்திரமாகவும், திகிலாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க | மோடி முதலைக்குட்டியை பிடித்தார் – பாடம் சொல்லிக்கொடுக்கும் தமிழ்நாடு மெட்ரிக்

தேனியில் ஸ்ரீ கௌமாரியம்மன் ரியல் எஸ்டேட் நடத்திவருபவர் ஜெய்முருகேஷ். இவர் வீடு புரோக்கராகவும் தொழில் செய்துவருகிறார். இவர் அடித்துள்ள போஸ்டரில், “வாடகை வீடு, ஒத்தி வீடு ஒரு மணி நேரத்தில் அமைத்துத் தரப்படும்.

வாடகை வீடு, ஒத்தி வீடு பார்ப்பதற்கு சர்வீஸ் சார்ஜ் கிடையாது. பேய் வீடுகளுக்கு கமிஷன் முற்றிலும் இலவசம்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Posters

தேனியில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்தப் போஸ்டர்களை பார்த்தவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல் துறையிடம் புகார் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | எடப்பாடி ஆளானு கேட்டு அடிச்சாங்க… தாக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர் – ரத்தக்களறியான அதிமுக தலைமை அலுவலகம்

தகவலின் அடிப்படையில் ஜெய்முருகேஷை அழைத்து போஸ்டர்களை கிழிக்கும்படு காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து அவர் போஸ்டர்களை கிழித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஜெய்முருகேஷ் கூறுகையில், “தூக்குபோட்டும், விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டவர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை. 

இதனால் எங்களை போன்றவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவேதான் பொதுமக்களை கவர இதுபோன்று போஸ்டர் ஒட்டினேன்” என்றார்.

மேலும் படிக்க | மசாஜ் செண்டர் பெண்ணை வீடு புகுந்து வெட்டிய மர்ம நபர்கள்! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

zeenews.india.com

Zee News Tamil

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading