Home Sports விளையாட்டு செய்திகள் IPL மட்டும்தான் இனி கிரிக்கெட்டா? ஜெய் ஷாவின் கருத்தும், ஆடம்பர டி20 லீக்குகளின் பாதகங்களும்! | Jay Shah’s recent statements regarding IPL sparks a debate

IPL மட்டும்தான் இனி கிரிக்கெட்டா? ஜெய் ஷாவின் கருத்தும், ஆடம்பர டி20 லீக்குகளின் பாதகங்களும்! | Jay Shah’s recent statements regarding IPL sparks a debate

0
IPL மட்டும்தான் இனி கிரிக்கெட்டா? ஜெய் ஷாவின் கருத்தும், ஆடம்பர டி20 லீக்குகளின் பாதகங்களும்! | Jay Shah’s recent statements regarding IPL sparks a debate

[ad_1]

அப்படிப் பார்த்தால், ஐபிஎல் எந்த நன்மையும் பயக்கவில்லையா?

மேற்கிந்தியத் தீவுகள் போல் சொந்த கிரிக்கெட் வாரியத்தால் பாராமுகம் காட்டப்பட்டு சரியான ஊதியம் அளிக்கப்படாமல் சோதனைகளுக்கு உள்ளாகும் ஒருசில வீரர்களுக்கு இது விடிவெள்ளி எனக் கொண்டால் கூட, பாகிஸ்தான், ஐயர்லாந்து உள்ளிட்ட ஐபிஎல்லில் பங்கேற்காத நாடுகளுக்கு இந்த இரண்டரை மாதங்கள் ஆஃப் சீசன் போலத்தான் இருக்கும். அது அவர்களையும் முடக்கிப் போடும். ஏன், ஐபிஎல்லில் வீரர்கள் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ரசிகர்களுக்குக் கூட இந்தக் காரணத்தினால் சர்வதேசக் கிரிக்கெட் மறுக்கப்படுவது நியாயமான ஒன்றாக இருக்க முடியாது. உண்மையில், இது அந்நாட்டு ரசிகர்களையும் ஐபிஎல்லை கண்டிப்பாகப் பார்க்க வைக்கும் ரகசிய ராஜ தந்திரம்தான் என்றாலும், அது எந்த அளவு கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியா போலவே மற்ற கிரிக்கெட் வல்லரசுகளும் தங்கள் நாட்டில் நடத்தப்படும் டி20 லீக்குகளை பிரபலமாக்கி, இதே நடைமுறையைப் பின்பற்றினால் வருடம் முழுவதும் டி20 திருவிழாக்கள் மட்டுமே நடைபெறும். போதாக்குறைக்கு ஜெய் ஷா, Multiverse concept-ஆக முன்பு ஆடப்பட்ட சாம்பியன்ஸ் லீக் டி20 போல இந்திய ஐபிஎல் அணிகளை மற்ற நாட்டின் டி20 அணிகளுடனும் ஆடவைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

ஆக, இது இன்னமும் நீண்டு சிட்னி சிக்ஸர்ஸ் டூர் ஆஃப் சிஎஸ்கே, ஆர்சிபி – மும்பை இந்தியன்ஸ் பைலேட்டரல் சீரிஸ் என்பதுவரை சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இவை எல்லாம் சேர்ந்து சர்வதேசக் கிரிக்கெட்டுக்கான காலத்தை நீர்த்துப் போகவே செய்யும். 2 1/2 மாதங்கள் ஐபிஎல், 9 1/2 மாதங்கள் சர்வதேசக் கிரிக்கெட் என்பது மாறி, ஒட்டுமொத்தமாக 8 மாதங்கள் வரை ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக்குகள், ஒரு உலகக் கோப்பை, அதுபோக மிஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களில் வேண்டுமென்றால் நாடுகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளட்டும் என்றுதான் சென்று முடியும்.

ஆக மொத்தம் டி20 கிரிக்கெட், ஓர் அசகாய சூரனாக வடிவெடுத்து ராட்சத கரத்தால் உண்மையான கிரிக்கெட்டின் குரல்வளையை நெறிக்கப் போவதற்கான அச்சாரத்தைத்தான் பிசிசிஐ தொடங்கி வைக்கிறது. பெஸ்ட் கிரிக்கெட் எனப்படும் டெஸ்ட் கிரிக்கெட் கூட ஐந்து நாள்கள் நீண்டாலும், இறுதி இரண்டு நாள்களில் தான் ஒளித்து வைத்துள்ள ஏற்ற இறக்கங்களாலும், திருப்புமுனைகளாலும், கிரிக்கெட்டின் காதலர்களாலும் தப்பிப் பிழைக்கும். ஆனால், ஒருநாள் போட்டிகள்தான் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

[ad_2]

Source link

sports.vikatan.com

அய்யப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here