Thursday, December 2, 2021
Homeசினிமா செய்திகள்Jai Bhim: 'ஜெய் பீம்' சர்ச்சை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது பரபரப்பு...

Jai Bhim: ‘ஜெய் பீம்’ சர்ச்சை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது பரபரப்பு வழக்கு! – case filed against suriya for jai bhim issue


அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யாவின் ‘ஜெய் பீம்‘ படத்தை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடாக இல்லை. தமிழ் சினிமாவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஒன்று திரண்டு சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யா, படத்தில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற வாசகத்தை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம். சிறந்த படைப்பை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

tamil samayamநிறைய கஷ்டங்களை சமாளிச்சேன்: வெயிட் லாஸ் சீக்ரெட்டை பகிர்ந்த சிம்பு!
இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்கினாலோ, எட்டி உதைத்தாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நேற்றைய தினம் பேட்டியளித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனிடையில் ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குனர் ஞானவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ‘ஜெய் பீம்’ படத்தால் மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட், இயக்குனர் தா.செ.ஞானவேல் மற்றும் ‘ஜெய் பீம்’ படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறேன் ; இயக்குனர் வருத்தம்!Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

என்னை ஏன் ஆட்டத்துல சேர்த்துக்கல.. ராஜுவுடன் சண்டைக்கு போன பாவனி.. சப்போர்ட்டுக்கு வந்த அக்ஷரா!

சென்னை: ரெட் டிவி அணியை போல ப்ளூ டிவி அணி சிறப்பாக இந்த பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பாவனிக்கு அதிகமாகவே உள்ளது. தன்னுடைய யோசனைகளை கேட்டு ராஜு...