Wednesday, September 28, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

Jana Gana Mana Review: கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. அரசியல் விளையாட்டே மெய்! | Jana Gana Mana movie Review in Tamil

என்ன கதை

என்ன கதை

கல்லூரியில் கூட்டிப் பெருக்கும் வேலையை செய்யும் சுப்பம்மாவின் அம்மாவும் இதே வேலையை தான் செய்தார். அவரது மகளும் இதே வேலையத்தான் செய்ய வேண்டும் என நினைக்கும் மனப் பாங்கு. அரசியல் விளையாட்டுக்காக மக்களையும் அதிகாரிகளையும் சட்டத்தையும் பகடை காயாக்கும் அரசியல்வாதியின் விளையாட்டு. அதற்காக பலியாகும் அப்பாவி பெண்கள். எதிர்த்து குரல் கொடுத்தாலும் ஒடுக்கி விடுவார்கள். அரசியல்வாதிகளின் தலைவலியை குறைக்க உருவாக்கப்படும் போலி பிரேக்கிங் நியூஸ் என நம் நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் மீதான கோபம் தான் இந்த படத்தின் நிஜக் கதை என்று சொல்ல வேண்டும்.

கொலை வழக்கும் என்கவுன்டரும்

கொலை வழக்கும் என்கவுன்டரும்

கர்நாடகவின் மத்திய பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிய சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்படுவதாக கதை ஆரம்பிக்கிறது. அவர் யார், மாணவர்களுக்கும் அவருக்குமான பிணைப்பு என்ன அவரது மரணத்திற்கு நீதிக் கேட்டு வீதியில் இறங்கி போலீசாரிடம் தடியடி வாங்கி மாணவ, மாணவிகள் எப்படி போராடுகின்றனர் என அனல் பறக்கிறது. அப்போது, அங்கே அந்த சூழலை சமாளிக்க ஏசிபி சஜன் குமாராக வருகிறார் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு. அதிரடியாக அவர் நடத்தும் விசாரணைகள் மூலமும் கடைசியாக கொலையாளிகள் 4 பேரும் தப்பித்து விடுவார்கள் என அவர் நடத்தும் என்கவுன்டர் மூலமாகவும் நேஷனல் ஹீரோவாக மாறுகிறார். ஆனால், அதற்கான வழக்கையும் அவர் சந்திக்க வேண்டிய நிலை வருகிறது.

வக்கீலாக பிருத்விராஜ்

வக்கீலாக பிருத்விராஜ்

படத்தின் ஆரம்ப காட்சியில் கைது செய்யப்படும் பிருத்விராஜ் இரண்டாம் பாதியில் வாக்கிங் ஸ்டிக் உடன் தாங்கி தாங்கி கோர்ட்டில் நடந்து வருவதை பார்த்ததுமே அந்த ஏசிபிக்கு ஆதரவாகத்தான் பேசப் போகிறார் என நினைக்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவருக்கு எதிராக பிருத்விராஜ் வாதாட ஆரம்பிக்க படம் டோட்டலாக சேஞ்ச் ஆகிறது.

செம ட்விஸ்ட்

செம ட்விஸ்ட்

முதல் பாதி முழுக்க திரையில் படம் பார்க்கும் ரசிகர்களையும் சேர்த்து இயக்குநர் நம்ப வைத்த கதையை இரண்டாம் பாதியில் அப்படியே தலைகீழாக போட்டு நொறுக்குவதில் தான் உண்மையை நினைத்து படத்தில் வரும் அந்த மாணவர்கள் நெக்குருகுவது போல நாமும் வெட்கத்தில் தலை குனியும் விதமாக ட்விஸ்ட் வைத்து இப்படி தான் நாட்டில் பல விஷயங்கள் தினமும் நடைபெற்று வருகிறது என்பதை சொன்ன இடத்திலேயே படம் வென்று விட்டது.

அரசியல் விளையாட்டு

அரசியல் விளையாட்டு

மரியம் எரித்து கொல்லப்படுவதை நேரில் பார்க்கும் சாட்சி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை என்பதை விசாரிக்கும் போது கண்ணால் காண்பது பொய் என்பது தெளிவாகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளின் முடிச்சுகளை அவிழ்க்கும் போது காதால் கேட்பது பொய் என்பதை நிரூபிக்கும் பிருத்விராஜ் இதற்கு பின்னால் நடந்த அரசியல் விளையாட்டுகளை விளக்கும் போது ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு, கேரளாவில் உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட மனு எனும் இளைஞர், வட இந்தியாவில் மாட்டிறைச்சி பெயரால் நடக்கும் கொலைகள், என இந்தியா முழுவதும் நடக்கும் கொலைகளுக்கு பின்னால் நிகழும் அரசியலை தோலுரித்து இருக்கிறார். பகிரங்கமாக காவிக் கொடியை காட்டுவது, பல அரசியல் குறியீடுகளை வைத்திருப்பது என ஃபாசிசத்துக்கு எதிரான குரலை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

பிளஸ்

பிளஸ்

முதல் பாதியில் ஹீரோவாக வரும் சூரஜ் வெஞ்சரமூடுவின் நடிப்பு அபாரம். இரண்டாம் பாதியில் வழக்கறிஞராக வரும் நடிகர் பிருத்விராஜ் அந்த கோர்ட் அறைக்குள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும், நீதிபதி, இறந்து போன மரியத்தின் அம்மாவிடம் நடத்தும் விசாரணை என ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் எழுதிய விதமும் படமாக்கிய விதமும் அட்டகாசம். குறைவான காட்சிகளிலேயே வந்தாலும் படம் முழுக்க நிறைந்திருக்கும் மம்தா மோகன்தாஸ், நீதிக்காக போராடும் மாணவி வின்சி என படத்திற்கு பல பிளஸ்கள் உள்ளன.

உண்மை ஒருநாள் வெல்லும்

உண்மை ஒருநாள் வெல்லும்

சுதீப் எலமோனின் ஒளிப்பதிவு மற்றும் ஜேக்ஸ் பிஜோயின் பின்னணியும் படத்திற்கு பலம் தான். சூழ்நிலைக் கைதியாக மாறினாலும் மனசாட்சிக்கு ஒருநாள் பயந்து தான் ஆக வேண்டும் என்பதும் தவறு செய்து விட்டால் நிம்மதியான தூக்கம் கூட வராது என்பதை சொல்லும் இடங்களும் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றன.

மைனஸ் இல்லையா

மைனஸ் இல்லையா

அரவிந்த் சுப்பிரமணியமாக வரும் பிருத்விராஜின் முன் கதை சற்றே தெளிவில்லாமல் திணிக்கப்பட்டது போல இருப்பதை குறையாக சொல்லலாம். மேலும், கடைசி கிளைமேக்ஸில் படம் முடிந்த பின்னரும் காட்சிகளை இழுத்துக் கொண்டு போய் சில ஜஸ்டிஃபிகேஷன் கொடுக்க முயல்வது குறையாகத் தெரியலாம். அந்த நீளத்தை கட் செய்திருந்தால் படமாக நச்சென இருந்திருக்கும்.

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading