Homeசினிமா செய்திகள்Kamal Hassan in vikram audio launch and trailer release date announcement -...

Kamal Hassan in vikram audio launch and trailer release date announcement – தமிழ் News


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’ . இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது என்பதும் குறிப்பாக ரயில்களில் இந்த படத்தின் போஸ்டர்கள் வரையப்பட்டு நாடு முழுவதும் பரபரப்பாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘விக்ரம்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக கமல்ஹாசன் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள பாடல்கள் வெளியாக இருப்பதை அடுத்து, இந்த பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read