Home சினிமா செய்திகள் Kangana Ranaut: விவசாயிகளை தீவிரவாதி என்பதா..?: நடிகை கங்கனா மீது போலீசில் புகார்! – case files against actress kangana ranaut

Kangana Ranaut: விவசாயிகளை தீவிரவாதி என்பதா..?: நடிகை கங்கனா மீது போலீசில் புகார்! – case files against actress kangana ranaut

0
Kangana Ranaut: விவசாயிகளை தீவிரவாதி என்பதா..?: நடிகை கங்கனா மீது போலீசில் புகார்! – case files against actress kangana ranaut

[ad_1]

அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், கார்ப்பரேட்களின் பிடியில் இந்திய விவசாயம் சிக்கிக் கொள்ளும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் ஒன்று சேர்ந்து பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத், வேளாண் சட்டம் வாபஸிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

கமலின் வார்த்தை என் சினிமா வாழ்க்கையையே புரட்டி போட்டது: பிரபல நடிகை நெகிழ்ச்சி!
இந்நிலையில் கங்கனாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் கங்கனா மீது புகார் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாஞ்சிந்தர் சிங், கங்கனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். போராடிய விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று விமர்சித்துள்ளார். கங்கனாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எல்லாருக்கும் ஹாய்; சாரா அலிகானின் வைரல் வீடியோ!

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here