Monday, July 26, 2021
Homeசினிமா செய்திகள்karthick Naren in Naragasuran released on august 13 - தமிழ் News

karthick Naren in Naragasuran released on august 13 – தமிழ் News


naragasooran1972021m

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ’நரகாசுரன்’. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஒரு சில பொருளாதார நெருக்கடி காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது

இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன், அருண்விஜய் நடித்த ’மாபியா’ என்ற படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்

naragasooran1972021m1

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ‘நரகாசுரன்’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘நரகாசுரன்’ ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அரவிந்தசாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்: இந்தியாவின் பிரணதி நாயக் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் தோல்வியை தழுவினார். ஜிம்னாஸ்டிக் பிரிவின் தனி நபர் பிரிவின் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெறும் போட்டிகள்...

Today's news

Latest offer's