Sunday, July 25, 2021
Homeசினிமா செய்திகள்Keerthi Suresh yoga video goes viral in internet - தமிழ் News

Keerthi Suresh yoga video goes viral in internet – தமிழ் News


keerthy suresh 1200

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படும் என்பதும் இந்த தினத்தில் பிரபலங்கள் பலர் தாங்கள் யோகா செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்கள் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே

e4z836ivkaufml8குறிப்பாக நேற்றைய தினம் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் யோகா செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தான் யோகா செய்த புகைப்படங்களையும் வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

குறிப்பாக அவர் யோகா செய்யும் மூன்று நிமிட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மிக நேர்த்தியாக அவர் யோகா செய்யும் முறையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

வெளியில் நடப்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் கட்டுப்படுத்தலாம். இனிய சர்வதேச யோகா நாள்! இந்த அழகான பயணத்தின் மூலம் என்னை அழைத்துச் சென்ற எனது குருவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's