Home சினிமா செய்திகள் KGF 2 : அவன் கத்தி வீசுன வேகலத்துல..ஒரு புயலே வீசுச்சி.. யாரும் குறுக்கே போயிடாதீங்க சார் ! | KGF Chapter2 Toofan Lyrical song out

KGF 2 : அவன் கத்தி வீசுன வேகலத்துல..ஒரு புயலே வீசுச்சி.. யாரும் குறுக்கே போயிடாதீங்க சார் ! | KGF Chapter2 Toofan Lyrical song out

0
KGF 2 : அவன் கத்தி வீசுன வேகலத்துல..ஒரு புயலே வீசுச்சி.. யாரும் குறுக்கே போயிடாதீங்க சார் ! | KGF Chapter2 Toofan Lyrical song out

[ad_1]

கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப்

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1, இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப். : சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது.

தள்ளிபோன ரிலீஸ்

தள்ளிபோன ரிலீஸ்

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே கே.ஜி.எஃப். : சாப்டர் 2′ ஜுலை 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தை திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவானது. இதையடுத்து கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தை வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.

துஃபான் லிரிக் வீடியோ

துஃபான் லிரிக் வீடியோ

இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தின் துஃபான் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இதில், சாவு எங்க மேல குதியாட்டம் போட்டுச்சு… அப்போ குறுக்க நின்னுட்டு இருந்த ஒருத்தனை அந்த மாரியாத்த முன்னாடி தலைய சீவினான்…அப்போ … சாவு மேல நாங்க குதியாட்டம் போட்டோம். அவன் கத்தி வீசுன வேகலத்துல.. ஒரு புயலே உருவாகிடுச்சி சார்… அந்த புயல் நராச்சியில இருக்குறவங்களுக்கு உசுறகொடுத்துச்சு, என்ற மிரட்டலான வசனத்துடன் பாடல் வெளியாகி உள்ளது.

நினைவுபடுத்தும் வகையில்

நினைவுபடுத்தும் வகையில்

முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மாரியத்தா முன்பு வில்லனை வதம் செய்து அங்கு கொத்தடிமைகளாக நூற்றுக்கணக்கான மக்களை சாவிலிருந்து காப்பற்றி இருப்பார் யாஷ். அந்த காட்சியும், அந்த இசையும் உண்மையில் உடம்பை சிலிர்க்கவைத்து இருக்கும். முதல் பாகத்தை நினைவுபடுத்தும் வகையில் துஃபான் பாடல் வெளியாகி உள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here