lot of senior actors refused to come valimai shooting says H Vinod – தமிழ் News

0
30
lot of senior actors refused to come valimai shooting says H Vinod – தமிழ் News


ajith friends652021m2

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. எனினும் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ’வலிமை’ படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிடவில்லை என்றாலும், தினந்தோறும் ’வலிமை’ படம் குறித்த ஏதாவது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் எச். வினோத் கொடுத்த தகவலின்படி ’வலிமை’ படத்திலிருந்து சில நடிகர்கள் திடீரென விலகி விட்டதாக தெரிகிறது

valimai120621 1

கடந்த ஆண்டு ’வலிமை’ படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கியதாகவும், அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கோவிட் தொற்று பயம் காரணமாக படப்ப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறி விட்டதாகவும், அந்த பேட்டியில் எச்.வினோத் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு சில லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதன் தொடர்ச்சி படப்பிடிப்பு நடத்த அதே லொகேஷனில் அனுமதி கிடைக்காததை அடுத்து அந்த பகுதிகளும் மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார்.





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here