Home தமிழ் News ஆரோக்கியம் Maanaadu release postponed to November 25

Maanaadu release postponed to November 25

0
Maanaadu release postponed to November 25

[ad_1]

சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் 2021 தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து அதற்கான வேலைகளில் இறங்கியது.  மேலும், தீபாவளி தினத்தில் ரஜினியின் அண்ணாத்த, விஷாலின் எனிமி படங்களும் வெளியாக இருந்தன.

சிம்பு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக திரும்பி ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார்.  இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது.  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  சிறிது நாட்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகபடுத்தியது .  

ALSO READ அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது! வெளியானது அண்ணாத்த டீஸர்!

இந்நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படம் தீபாவளி தினத்தில் வெளியானால் வசூலை பெறுமா என்ற சந்தேகம் படக்குழுவிற்க்கு எழுந்தது.  இதன் காரணமாக தற்போது மாநாடு திரைப்படத்தினை நவம்பர் 25ம் தேதி வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவெடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது மாநாடு திரைப்படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது.  தீபாவளிக்கு வந்து பாப்போம் என்று இறங்கி விடலாம்.  ஆனால், என்னை நம்பி படம் வியாபாரம் செய்து கொண்டவர்கள் பாதிக்க பட கூடாது.  அதனால் மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி நவம்பர் 25ம் தேதி வெளியாக உள்ளது என்று கூறினார்.  

maanadu

நவம்பர் 25ல் மாநாடு திரைப்படம் வேறு படங்களுடன் போட்டி இன்றி தனி படமாக வெளியாக உள்ளது.  தற்போது தீபாவளி ரேஸில் இருந்து மாநாடு திரைப்படம் விலகி உள்ளதால் வேறு படங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

ALSO READ ரசிகர்களுக்கு திரைப்பட விருந்தாக அமையும் இந்த தீபாவளி!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here