Saturday, July 24, 2021
Homeசினிமா செய்திகள்Maniratnam in Ponniyin selvan new poster released - தமிழ் News

Maniratnam in Ponniyin selvan new poster released – தமிழ் News


ponniyininselvan1972021m3

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ’பொன்னியின் செல்வன்’ குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வரும் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது

ponniyininselvan1972021m1

அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டரில் ’பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

H-வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் அப்டேட் செய்யப்படும் ஹீரோ கிளாமர்!! விரைவில் அறிமுகமாகிறது

<!----> இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் தான் கிளாமர் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ...

Today's news

Latest offer's