தமிழ் Newsஆட்டோமொபைல்MG Hector Facelift: இந்த காருக்காகதான் எல்லாரும் காத்திருக்காங்க! டாடா, மாருதிக்கு...

MG Hector Facelift: இந்த காருக்காகதான் எல்லாரும் காத்திருக்காங்க! டாடா, மாருதிக்கு செக்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

-

Four Wheelers

oi-Arun Muthu

டாடா, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையில், எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் அதிரடியான காரியம் ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் இதுதான்.

இந்த காருக்காகதான் எல்லாரும் காத்திருக்காங்க! டாடா, மாருதிக்கு செக்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் டாடா ஹாரியர் (Tata Harrier) போன்ற கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிட்டு வருகிறது. இதில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மறுபக்கம் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்களும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இப்படி போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், எம்ஜி நிறுவனமும் ஹெக்டர் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த சூழலில், புதிய எம்ஜி ஹெக்டர் காரின் அறிமுக தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய எம்ஜி ஹெக்டர் கார் வரும் ஜனவரி 5ம் தேதி (January 5) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எம்ஜி நிறுவனம் ஏற்கனவே புதிய ஹெக்டர் காரின் ஒரு சில டீசர்களை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் புதிய எம்ஜி ஹெக்டர் கார் எப்படி இருக்கும் என்பது? நமக்கு ஓரளவிற்கு தெரியவந்துள்ளது. வெளிப்புறத்தை பொறுத்தவரையில், புதிய க்ரில், புதிய முன் பக்க பம்பர், மாற்றியமைக்கப்பட்ட ஏர் டேம் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை வழங்கப்படவுள்ளன. உட்புறத்தை பொறுத்தவரையில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெறவுள்ளது.

இதை மிஸ் பண்ணீடாதீங்க: பழைய வண்டிகளுக்கு திடீர் தடை! வீட்டு வாசலை தாண்டினாலே 20 ஆயிரம் அபராதம் கட்டணும்! சுத்தி வளச்சு பிடிக்கறாங்க!இதை மிஸ் பண்ணீடாதீங்க: பழைய வண்டிகளுக்கு திடீர் தடை! வீட்டு வாசலை தாண்டினாலே 20 ஆயிரம் அபராதம் கட்டணும்! சுத்தி வளச்சு பிடிக்கறாங்க!

இதுதான் இந்த செக்மெண்ட்டில் உள்ள கார்களிலேயே பெரியதாக இருக்கும். அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் புதிய எம்ஜி ஹெக்டர் கார் பெற்றுள்ளது. அதேபோல் இன்னும் பல்வேறு புதிய அதிநவீன வசதிகளும், 2023 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றிருக்கும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களை புதிய எம்ஜி ஹெக்டர் கார் பெற்றிருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

புதிய மாடலின் வருகைக்கு பின்னர், எம்ஜி ஹெக்டர் காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாடல் ஆகும். எனவே புதிய எம்ஜி ஹெக்டர், போட்டி நிறுவனங்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்த கூடும். இதற்கு அடுத்தபடியாக 10-15 லட்ச ரூபாய் விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

2023 mg hector suv india launch date

Story first published: Sunday, November 13, 2022, 13:51 [IST]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

Pro Kabaddi : Two Spot Three Matches; Will Tamil Thalaivas qualify for the ‘play-offs’? | Pro Kabaddi Tamil Thalaivas Playoffs Chances

Tamil Thalaivas can easily beat these two teams. But if they lose any of the next three...

This ultra-cheap mobile has Android 12 and a large battery for only 129 euros

For much less than 150 euros you can get a good cheap mobile with a large screen, Android...

Go kill it!…Rahul Preet Singh in another level look…Viral photos….

Rahul Preet Singh is acting in all language films like Tamil, Telugu, Kannada, Hindi. He mostly acted...

FIFA Worldcup 2022 Round Up: Incident Japan; The Australian player who spoke controversially about Messi! |FIFA Worldcup 2022 Round Up 1-12-2022

1. Yesterday, Croatia played against Belgium at the Ahmed Bin Ali Stadium. The match ended in a...

புதிய ரோபோ வடிவமைப்பு நாம் விண்வெளியில் பொருட்களை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதில் புரட்சியை ஏற்படுத்தலாம்

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை பூமிக்கு மேல் காட்டும் 3D அனிமேஷன். கடன்: ஈஎஸ்ஏ/ஹப்பிள் (எம். கோர்ன்மெசர் & எல்எல் கிறிஸ்டென்சன்)ஒரு புதிய நடைபயிற்சி...

Wordle in Spanish, scientific and with tildes for today December 2: solution and clues

Solve Hoy's Wordle easily with all these clues. Let's go one more day with the solution to today's...

Must read