Homeதமிழ் Newsஆரோக்கியம்MK Stalin Attends A.R. Rahman's Daughter Reception | ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண...

MK Stalin Attends A.R. Rahman’s Daughter Reception | ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு


ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற அவர் அடுத்தடுத்து இசையமைத்த பாடல்கள் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பரவின. இதனையடுத்து அவர் இசைப்புயல் என அழைக்கப்பட்டார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்திக்கு சென்ற ரஹ்மான் அங்கும் தனது முத்திரையை பதித்தார். தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டம் க்ளோப் ஆகிய விருதுகளையும் பெற்றார். 

இதனையடுத்து இந்தியாவின் பெருமைமிகு முகங்களில் ஒருவர் ஆனார் ஏ.ஆர். ரஹ்மான். அவர் தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் மாமன்னன், விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா, பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் இரவின் நிழல், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Rahman

படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி கச்சேரிகளும் செய்துவருகின்றார். சமீபத்தில்கூட ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது மைதானத்தில் தனது குழுவினருடன் பாடல்களை பாடினார்.

இதற்கிடையே ரஹ்மான் – சாய்ரா பானுவின் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினீயரான ரியாஸ்தீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இதையடுத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் முன்னிலையில், இருவருக்கும் கடந்த மாதம் 5ஆம் தேதி மாலை சென்னையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. 

 

பிரபலங்கள் யாரும் அழைக்கப்படாத நிலையில், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைப்பேன் என கூறியிருந்தார் ரஹ்மான்.

அதன்படி நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்ற ஏ.ஆர்.ஆர் ரஹ்மானின் மகள், கதீஜா – ரியாஸ்தீனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதுமணத் தம்பதிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

எல்லைகள் மற்றும் தடைகளைத் தாண்டி, தனது ஆத்மார்த்தமான இசையால் மேலும் பல இதயங்களைக் ஒன்றிணைக்க அன்பான ஏ.ஆர். ரஹ்மானை வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | லோகேஷ் – சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘இரும்பு கை மாயாவி’ – தயாரிப்பாளர் உறுதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

<!----> இந்தியர்களையும் யமஹா ஆர்15 பைக்கையும் பிரிக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கடந்த பல வருடங்களாக இந்திய சந்தையில் யமஹாவின்...