Homeதமிழ் Newsஆரோக்கியம்Movies Releasing On OTT This Week | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்

Movies Releasing On OTT This Week | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்


ஜான் வாட்ஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ஸ்பைடர் மேனை அடிப்படையாக வைத்து வெளியான படம் ‘ஸ்பைடர் மேன்:நோ வே ஹாம்’ .  இந்த ஹாலிவுட் திரைப்படத்தை கொலம்பியா பிக்ச்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருந்தது.  இப்படம் 2017ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங்’ மற்றும் 2019ம் ஆண்டு வெளியான  ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம்‘ ஆகியவற்றின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டதாகும்.  நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நேற்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்! காரணம் என்ன?

 

சுனி இயக்கத்தில் இந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான காமெடி கலந்த த்ரில்லர் படம் ‘அவதார புருஷா’.  இந்த படத்தை புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.  இந்த படத்தில் சரண், ஆஷிகா ரங்கநாத், சாய் குமார், சுதா ராணி, பவ்யா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  தற்போது இந்த படம் ஜூன்-14ம் தேதியான இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.  மேலும் இதே தினத்தில், இதே ஓடிடி தளத்தில் மற்றொரு படமும் வெளியாகுகிறது.  விஜய் குமார் கலிவரப்பு இயக்கத்தில் தெலுங்கு மொழியில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ‘ஜெயாம்மா பஞ்சாயதி’.  இப்படத்தில் சுமா, தேவிபிரசாத், தினேஷ்குமார், நிகிதா, கணேஷ் யாதவ் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, தமிழ் மொழியில் உருவான ஆக்ஷன் த்ரில்லர் வெப் தொடரான பிங்கார்டிப் இரண்டாவது சீசன் ஜூன்-17ம் தேதி ‘ஜீ5’ தளத்தில் வெளியாகவுள்ளது.  இதன் முதல் சீசன் ஆகஸ்ட் மாதம் வெளியானது, இந்த தொடரில் பிரசன்னா, ரெஜினா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.கே.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான ‘O2’ ஜூன்-17ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.  சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது குழந்தையின் தாயாக நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளார், இதில் யூடியூப் பிரபலம் ரித்விக் குழந்தையாக நடித்திருக்கிறார்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.  மேலும் இதே தினத்தில், புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் உருவான ‘சூழல்’ படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகுகிறது.  இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | பாராளுமன்றத்தில் நடைபெறும் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read