Tuesday, July 27, 2021
Homeசினிமா செய்திகள்Music Director Sean Roldan answer to dhanush fans - தமிழ் News

Music Director Sean Roldan answer to dhanush fans – தமிழ் News


dhanush seanroldan2072021m1

தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே போல் ’வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றும் இந்த படம் வெற்றி பெறாவததற்கும் இசையே காரணம் என்றும் கூறப்பட்டது

’வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் இசையமைத்து வந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்

dhanush seanroldan2072021m

இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் அவரை கேலி செய்ய ஆரம்பித்தனர். நீங்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக செய்ததே போதும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனை அடுத்து இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்

வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்காக இசை பணிகளை முடிக்க எனக்கு மூன்று நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும், அதில் இப்படி என்னால் சிறப்பான இசையை இசைக்க முடியும் என்றும், தனுஷ் ரசிகர்கள் இதனை கேலி செய்வது மனசாட்சியே இல்லாத செயல் என்று தெரிவித்தார்

dhanush seanroldan2072021m2

ஆனாலும் கண்டிப்பாக தனுஷுடன் மீண்டும் இணைந்து தனுஷ் ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் நல்ல பாடல்களை கொடுப்பேன் என்றும் அதற்கான நேரம் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's