Saturday, July 24, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்O Panneerselvam confirms that AIADMK-BJP Allaince will continue | பாஜகவுக்கு எதிராக அதிமுக...

O Panneerselvam confirms that AIADMK-BJP Allaince will continue | பாஜகவுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து.. கூட்டணி தொடருமா? ஓபிஎஸ் ட்வீட்


சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில் அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மக்கள் அதிமுக ஆட்சி மீது மக்கள் மதிப்பு வைத்திருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக தோற்று விட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்துவிட்டோம் என்று கூறியிருந்தார்.இது அதிமுகவிலும், பாரதிய ஜனதா கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பதலடி கொடுக்கும் விதமக, பாஜகவின் கே.டி. ராகவன், நீங்கள் சொல்வது போலவே  ‘உங்களால் தான்’ என்ற எண்ணம் எங்களிடமும்  உள்ளது என்று சாடினார்.

ALSO READ | TN Assembly தேர்தல் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியே காரணம் – முன்னாள் அமைச்சர் அதிரடி

இந்நிலையில், அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்றும், தமிழக நலன் தேசிய நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டணி தொடரும் எனவும் கூறியுள்ளார். பாஜக (BJP) மீது பிரதமர் மோடியின் மீதும் நம்பிக்கை உள்ளது என அவர் மேலும் கூறினார். 

மேலும் அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்ற சஎர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  சி.வி சண்முகம் கூறியது அதிகாரப்பூர்வ கருத்தல்ல, அவரது சொந்த கருத்து எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சி பற்றி தெரியும். பாஜக உடனான அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா என்பது பற்றி கட்சியின் மேலிடம் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

Also Read | சதுரகிரி மலை செல்ல தடை; வனதுறை உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

ஒலிம்பிக்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி

டோக்யோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுகின்றன. உலக விளையாட்டு ஆர்வலர்கள்...

Today's news

Latest offer's