Homeசினிமா செய்திகள்One million followers to music director Yuvan Shankar Raja - தமிழ் News

One million followers to music director Yuvan Shankar Raja – தமிழ் News


யுவன்சங்கர் ராஜாவுக்கு மிகக்குறைந்த ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பதாக நெட்டிசன்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேலி செய்த நிலையில் யுவனின் ரசிகர்கள் ஆவேசமாக களத்தில் இறங்கி தற்போது ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் பெற்று தந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்ற ஒரு சிலரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இணைந்தனர் என்றும், ஆனால் பல வருடங்களாக இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஒரு மில்லியனுக்கும் குறைவான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்ற மீம்ஸ் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டது

இதனையடுத்து யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி யுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்ககளை சேர்ப்பதில் முயற்சி செய்தனர். இந்த முயற்சியின் காரணமாக தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து யுவனின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

யுவன்சங்கர் ராஜாவின் இசைக்கு மிகப் பெரிய கூட்டம் தமிழகத்தில் உள்ளது என்பதை இதன் மூலம் ரசிகர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read