Wednesday, December 1, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்Qatar GP: 7 வருடங்களுக்குப் பிறகு போடியத்தில் அலோன்சோ, முதலிடத்தில் ஹாமில்ட்டன்!

Qatar GP: 7 வருடங்களுக்குப் பிறகு போடியத்தில் அலோன்சோ, முதலிடத்தில் ஹாமில்ட்டன்!


கத்தாரின் (Qatar GP) முதல் ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ பந்தயம், இரவுப் நேர ரேஸாக நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இதில் வெற்றி பெற்று டைட்டில் ரேஸில் இடைவெளியைக் குறைத்துக்கொண்டிருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன். கத்தார் கிராண்ட் ப்ரீ தொடங்குவதற்கு முன்னதாக, மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டனுக்கு இடையே 14 புள்ளிகள் இடைவெளி இருந்தது. இந்த வெற்றியின் மூலமாக, அதனை 8 புள்ளிகளாகக் குறைத்திருக்கிறார் லூயிஸ்.

தகுதிச்சுற்று

தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வழக்கம் போல் மெர்சிடீஸின் லூயில் ஹாமில்ட்டனே முதல் இடத்தில் முடித்தார். வேறு எந்தத் தடைகளும் இன்றி கிராண்ட் ப்ரீயின் போல் பொசிஷனிலும் ஹாமில்ட்டனே இருந்தார். இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் வெர்ஸ்ட்டப்ன் மற்றும் வால்ட்டேரி போட்டாஸ் ஆகியோர் தகுதிச்சுற்றை முடித்திருந்தார்கள். தகுதிச்சுற்றில் Q3-யின் முடிவில் ஆல்ஃபா டூரி டிரைவர் பியர் கேஸ்லியின் காரில் சேதம் ஏற்பட்டதால் 15 வது திருப்பத்திற்குப் பின்னர் அவரது காரை நிறுத்தினார். இதனால் முதலில் இரட்டை மஞ்சள் கொடியும் பின்னர் ஒற்றை மஞ்சள் கொடியும் காட்டப்பட்டது.

2021 11 21T154600Z 1648880828 UP1EHBL17SLFH RTRMADP 3 MOTOR F1 QATAR
வெர்ஸ்ட்டப்பன், ஹாமில்ட்டன், அலோன்சோ |Qatar GP Podium

மஞ்சள் கொடி காட்டப்படும் போது மற்ற போட்டியாளர்கள் வேகத்தைக் குறிப்பிட்ட அளவிற்குக் குறைக்க வேண்டும். ஆனால், இரட்டை மஞ்சள் கொடி காட்டப்பட்ட போது வெர்ஸ்ட்டப்பன் வேகத்தைக் குறைக்காமல் அந்தக் கொடியினைக் கடந்து செல்வதை அவரது ஆன்போர்டு கேமாரவின் மூலம் உறுதிசெய்தார்கள். அதே போல் போட்டாஸும் மஞ்சள் கொடி காட்டப்பட்ட போது வேகத்தைக் குறைக்காமல் கடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து வெர்ஸட்டப்பனுக்கு கிராண்ட் ப்ரீ தொடக்க வரிசையில் 5 இடங்கள் கிரிட் பெனால்டியும், போட்டாஸுக்கு 3 இடங்கள் கிரிட் பெனால்டியும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் முடித்திருந்தாலும் 5 இடங்கள் கிரிட் பெனால்டி காரணமாக வெர்ஸ்ட்டப்பன் 7-ஆம் இடத்திலும், 3 இடங்கள் கிரிட் பெனால்டி காரணமாக போட்டாஸ் 6-ம் இடத்திலும் போட்டியைத் தொடங்கவேண்டியிருந்தது. வெர்ஸ்ட்டப்பன் மற்றும் போட்டாஸ் பின்னால் சென்றதால், 4 மற்றும் 5-ஆம் இடங்களில் இருந்த பியர் கேஸ்லி மற்றும் ஃபெர்னான்டோ அலோன்சோ ஆகியோர் 2 மற்றும் 3-ஆம் இடங்களில் ரேஸைத் தொடங்கினார்கள். கடந்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ரெட்புல்லின் செர்ஜியோ பெரஸ் மற்றும் ஃபெராரியின் சார்ல் லெக்லெர்க் ஆகியோர் தகுதிச்சுற்றின் Q2-விலேயே வெளியேறி 11 மற்றும் 13-ம் இடத்தில் மெயின் ரேஸைத் தொடங்கினார்கள்.

கிராண்ட் ப்ரீ:

பிரேசிலில் மீடியம் டயராகக் கொடுத்திருந்த C3 காம்பவுண்டை, கத்தாரில் சாப்ட் டயராகக் கொடுத்திருந்தது பிரெல்லி. மெர்சிடீஸ், ரெட்புல் மற்றும் ஃபெராரி டிரைவர்கள் அனைவருமே மீடியம் டயர்களிலேயே போட்டியைத் தொடங்கினார்கள். இவர்களுடன் லான்ஸ் ஸ்ட்ரோல், டேனியல் ரிக்கார்டோ மற்றும் மேஸபின் ஆகியோரும் மீடியம் டயர்களில் ரேஸைத் தொடங்கினார்கள். இவர்களைத் தவிர்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சாஃப்ட் டயர்களிலேயே தொடங்கினார்கள். அலோன்சோவும் சாப்ட் டயரில் தான் போட்டியைத் தொடங்கினார்.

7-ஆம் இடத்தில் போட்டியைத் தொடங்கிய வெர்ஸ்ட்டப்பன் முதல் சில திருப்பங்களிலேயே 4-ஆம் இடத்திற்கு முன்னேறினார். 6-ஆம் இடத்தில் தொடங்கிய போட்டாஸ் முதல் லேப் முடிவிற்குள்ளேயே 11-ஆம் இடத்திற்குப் பின்தங்கினார். ஃபெர்னான்டோ அலோன்சோ தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு தொடக்கத்தில் சில லேப்கள் 2-ஆம் இடத்தில் நீடித்தார்.

5-வது லேப்புக்குள்ளேயே மற்ற இருவரையும் ஓவர்டேக் செய்து 2-ம் இடத்திற்கு வந்தார் வெர்ஸ்ட்டப்பன். முதல் இடத்தில் ஹாமில்ட்டன், இரண்டாம் இடத்தில் வெர்ஸ்ட்டப்பன் எனப் போட்டி 5-ஆம் லேப்புக்குப் பிறகு வழக்கம் போல நகரத் தொடங்கியது. வெர்ஸ்ட்டப்பன் இரண்டாம் இடத்திற்கு வந்த போது அவருக்கும் ஹாமில்ட்டனுக்கு இடையே 4 நொடிகள் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி போட்டி முடியும் குறையவே இல்லை, குறையாமல் ஹாமில்ட்டன் பார்த்துக் கொண்டார். சொல்லப்போனால், இடைவெளி அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.

lewis hamilton mercedes w12 pi
கத்தார் கிராண்ட் ப்ரீ

ஹாமில்ட்டனின் வேகத்திற்கு ரெட்புல் காரால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் இரண்டாம் இடம் தான் என்பதனை வெர்ஸ்ட்டப்பனே உணர்ந்து கொண்டார். எனவே, இருவரும் போட்டியின்றி முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் ரேஸ் செய்து போட்டியை முடித்துக் கொண்டார்கள். மூன்று மற்றும் நான்காம் இடத்துக்குத் தான் கடைசி வரை போட்டி கொஞ்சம் கடுமையாக இருந்தது. 11-வது இடத்தில் இருந்த பெரஸ் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியிட்டு 7-ஆம் இடத்துக்கு முன்னேறினார்.

சாப்ட் டயரில் தொடங்கியிருந்தாலும் 23-வது லேப்பில்தான் பிட் எடுத்து ஹார்டு டயருக்கு மாறினார் அலோன்சோ. 28-வது லேப்பில் 5-ஆம் இடத்தில் இருந்த லெக்லெர்க்கை அலோன்சோ மற்றும் பெரஸ் இருவருமே ஓவர்டேக் செய்து 5 மற்றும் 6-ஆம் இடத்துக்கு முன்னேறினார்கள். அல்பீனைவிட ரெட்புல் கார் வேகமானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். 29-வது லேப்பில் அலோன்சோவையும் ஓவர்டேக் செய்து 4-ஆம் இடத்துக்கு முன்னேறினார் பெரஸ்.

முதல் இரண்டு இடங்களில் ஹாமில்ட்டனும், வெர்ஸ்ட்டப்பனும் தனித்தனியாக ரேஸ் செய்து கொண்டிருக்க மூன்றாவது இடத்துக்கான போட்டி சற்று நேரம் பெரஸ் மற்றும் போட்டாஸ் இடையே நீடித்தது. பின்னாலேயே அலோன்சோ, கேஸ்லி மற்றும் நாரிஸ் தொடர மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களுக்கான போட்டி சற்று விருவிருப்பாகவே இருந்தது. 32 லேப் வரை முதல் பிட் கூட எடுக்காமல் ஓட்டிக் கொண்டிருந்தார் போட்டாஸ். கார் டயர் பஞ்சராகி, 33-வது லேப்பில் போட்டாஸ் பிட் எடுத்து வெளியேறும் போது 12-வது இடத்தில் இருந்தார். மூன்றாவது இடத்துக்குப் பெரஸும் நான்காவது இடத்துக்கு அலோன்சோவும் முன்னேறியிருந்தனர்.

போட்டியாளர்களில் 9 பேர் மட்டுமே இரண்டு பிட் ஸ்டாப்க்களை எடுத்திருந்தனர். இரண்டு பிட் ஸ்டாப் எடுத்தவர்களுள் பெரஸூம் ஒருவர். 42-வது லேப்பில் பெரஸ் இரண்டாவது பிட் ஸ்டாப் எடுத்து மீடியம் டயர்களுக்கு மாறிய போது அலோன்சோ ஹார்டு டயர்களுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருந்தார். கடைசி சில லேப்கள் இருக்கும் போது அலோன்சோவுக்கும் பெரஸுக்குமான இடைவெளி 9 நொடிகள் இருந்தது. 32 லேப்கள் ஓடிய டயர்களோடு அலோன்சோ போட்டியிட்டுக் கொண்டிருந்தார். டயர்களுக்கு எந்தப் சேதமும் ஏற்படக்கூடாது என கவனமாகவே போட்டியிட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் அவரே மூன்றாவதாக முடித்து போடியம் ஏறினார்.

55-வது லேப்பில் விர்சுவல் சேஃப்டி கார் காட்டப்பட அடுத்த இரண்டு லேப்கள் பொறுமை காத்தனர் போட்டியாளர்கள். ஆனால், கடைசியில் ஒரு லேப் தான் மீதம் இருந்தது என்பதால் பெரிய மாற்றங்கள் மற்றும் கடைசிக் கட்ட விறுவிறுப்புகளின்றி போட்டி முடிந்தது.

MV Insta
கத்தார் கிராண்ட் ப்ரீ போடியம்

வேகமான லேப்புக்கான ஒரு புள்ளி வெர்ஸ்ட்டப்ன வசமே இருந்தது. எனினும், ஒரு வேளை ஹாமில்ட்டன் கடைசி லேப்பில் அந்த ஒரு புள்ளியைத் தட்டிப் பறித்து விடலாம் என்பதால், விர்சுவல் சேஃப்டி கார் இருக்கும் போது பிட் எடுத்து சாப்ட் டயருக்கு மாறினார். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. கடைசி லேப்பில் வேகமான லேப்புக்கான ஒரு புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் முடித்தார் வெர்ஸ்ட்ப்பன். நான்காம் இடத்தில் ரெட்புல்லின் பெரஸூம், ஐந்தாம் இடத்தில் அல்பீனின் மற்றொரு போட்டியாளரான ஓகானும் போட்டியை முடித்தனர். 2014 ஹங்கேரியன் கிராண்ட் ப்ரீயில் தான் கடைசியாகப் போடியம் ஏறியிருந்தார் அலோன்சோ. 7 வருடங்களுக்குப், பிறகு 104 போட்டிகளுக்குப் பிறகு நேற்று கத்தாரில் போடியம் ஏறியிருக்கிறார்.



Source link

sports.vikatan.com

பிரசன்னா ஆதித்யா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Vineet Kumar Singh Ruchiraa Gormaray Wedding actor shared photos on social media

एक्टर विनीत कुमार सिंह (Vineet Kumar Singh Wedding) ने हाल ही में अपने इंस्टाग्राम पर दो तस्वीरें शेयर की हैं. इन तस्वीरों के...