Homeதமிழ் Newsஆரோக்கியம்Question about RRR movie in School examination is viral on internet |...

Question about RRR movie in School examination is viral on internet | பள்ளித் தேர்வில் ‘RRR’ படம் பற்றிக் கேள்வி


இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். 

பான் இந்தியா ரிலீசாக 5 மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தெலுங்கு பேசும் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்னும் கூட ஓடிக்கொண்டிருக்கிறது.

                                                      tr1

இந்நிலையில் இப்படம் திடீரென மீண்டும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இதற்குக் காரணம்- பள்ளித் தேர்வில் இப்படம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வியே! ஆம், தெலங்கானாவில் பள்ளி ஆங்கிலத் தேர்வின் வினாத்தாளில் இப்படம் பற்றிக் கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. 

அதில் ​​‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தையும், அதில் கொமரம் பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பையும் பார்த்திருப்பீர்கள். இந்நிலையில், பிரபல டிவி சேனலில் நீங்கள் நிருபராக இருக்கும் பட்சத்தில், ஜூனியர் என்.டி.ஆரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் அதில் எந்த மாதிரியான கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

                                                         tr2

மேலும் படிக்க | ‘Marvel’ லெவலில் உருவாகும் ‘KGF 3’ – உலகையே அதிரவைக்கும் புதிய அப்டேட்!

 

பள்ளித் தேர்வில் ஆர்.ஆர்.ஆர் படம் பற்றிக் கேட்கப்பட்டுள்ள அந்த வினாத்தாள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இப்படத்தின் தென்னிந்திய மொழிப் பதிப்புகள் வருகிற 20ஆம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன. இதன் இந்திப் பதிப்பு அதே தேதியில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது. மே 20ஆம் தேதி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளும்கூட!

மேலும் படிக்க |  ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! – அதுவும் இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds