Monday, November 29, 2021
Homeசினிமா செய்திகள்Rajini 169 update :``நாம ஒரு படம் பண்ணுவோம்" எனச் சொன்ன ரஜினி! | Article...

Rajini 169 update :“நாம ஒரு படம் பண்ணுவோம்” எனச் சொன்ன ரஜினி! | Article about rajini 169 movie update


‘அண்ணாத்த’வுக்கு பிறகு ரஜினியின் 169 படத்தை இயக்கப் போவது யார்? தயாரிப்பது யார் என்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துவருகின்றன எனக் கேள்விப்பட்டதும் சில தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். ரஜினியின் அடுத்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..’ இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துப்போகவே ஏ.ஜி.எஸ். நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே ‘அண்ணாத்த’ படத்தை முடித்த கையோடு ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில்தான் ரஜினியின் 169வது படத்தை பாண்டிராஜ் இயக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.

இயக்குநர் பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ்

காரணம், பாண்டிராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்’ ரஜினிக்கு மிகவும் பிடித்த படம். அந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, “நாம ஒரு படம் பண்ணுவோம்” என ரஜினி பாண்டிராஜிடம் சொல்லியிருக்கிறார். ‘பேட்ட’ படம் முடிந்த போதும், ரஜினி- பாண்டிராஜ் சந்திப்பு நடந்திருக்கிறது. எனவே, ரஜினியின் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அப்படி இருவரும் இணைந்தால், அந்தப் படத்தை சன் பிக்சர்ஸே தயாரிக்க முன்வரும் என்றும் சொல்கிறார்கள். காரணம், சன் பிக்சர்ஸில் பாண்டிராஜ் இயக்கிய ‘நம்ம வீட்டு பிள்ளை’ சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து சூர்யாவை வைத்து இயக்கியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்தது. சொன்ன பட்ஜெட்டிற்குள், திட்டமிட்ட நாட்களில் பாண்டிராஜ் படத்தை முடித்துக் கொடுப்பதால், ரஜினிக்கும் பாண்டிராஜின் மீது ஒரு ப்ரியம் உண்டு. தற்போது வரை இந்த இருவரில் பாண்டிராஜிக்கே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.



Source link

cinema.vikatan.com

மை.பாரதிராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds