Homeசினிமா செய்திகள்Rajinikanth: ஆண்டவன் இருக்கான்.. தைரியமா இரும்மா: ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய ரஜினி! - actor...

Rajinikanth: ஆண்டவன் இருக்கான்.. தைரியமா இரும்மா: ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய ரஜினி! – actor rajini wishing speedy recovery for her fan daughter


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த‘. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, தங்க செயின் பரிசாக அளித்தார். அத்துடன் சிவாவுடன் 3 மணிநேரம் கலந்துரையாடிவிட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களும் இணைத்தில் வெளியாகி வைரலானது.

உலகத்துலே இந்த இயக்குனர் படத்துல நடிக்கதான் ஆசை: நடிகர் நானி!
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ரசிகரின் மகள் சௌமியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்த ரஜினி, அவரை காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். கண்ணா பயப்படாத, தைரியம் இரு. கொரோனாவால என்னால நேர்ல வர்ற முடியலை என ஆறுதலாக பேசியுள்ளார் ரஜினி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

ரஜினியின் இந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் தலைவா நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கனும் என கமெண்ட் செய்து வருகின்றனர். ‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து ரஜினியின் 169 வது படத்தை யார் இயக்குவார்கள் என்பது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக உள்ளது. இதில் சிறுத்தை சிவா, பாண்டிராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா அண்ணாத்தே வசூல் இவ்வளவா?



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read