Tuesday, July 27, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்Ration Card: Criminal action taken against outsiders if they are found in...

Ration Card: Criminal action taken against outsiders if they are found in ration shops | Tamil Nadu: ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர யாரும் இருந்தால் கிரிமினல் குற்றம்


சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் மோசடிகள் நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது.அதன் ஒருபடியாக, தமிழக ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் தேதியில் இருந்து மீண்டும் பயோமேட்ரிக் மூலம் அடையாளம் சரி பார்த்த பிறகு ரேஷன் பொருட்களைத் தரும் நடைமுறை தொடங்கிவிட்டது.

தற்போது, ​​80 கோடி இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயனடைகின்றனர். ஆனால் இந்த திட்டத்தை பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளவர்களும் பயன்படுத்துகின்றனர்.

Also Read | ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை அவகாசம்

அதை தடுப்பதற்காக, ஆதார் எண்ணுடன் ரேஷன் அட்டையை இணைப்பது, பயோமெட்ரிக் முறை என மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது என உத்தரவு. ரேஷன் கடைகளில் வெளிநபர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது,

ரேஷன் கடையில் இருக்கும் வெளிநபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வெளிநபர்களை அனுமதிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.  

இணையவழியில் புகாரளிப்பதில் சிரமம் உள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தரப்பிலிருந்து வந்த புகார்களை எம்.எல்.ஏ-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் விளக்கினர். இதைத்  தொடர்ந்து மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்ட அரசு, அனைத்து ரேஷன் கடைகளிலும் (Ration Shops) புகார் பதிவேடுகள் வைக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Also Read | Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!

இணையவழி புகார் பதிவில் சில நன்மைகள் இருந்தாலும், பதிவேடு முறையில் புகார்களை உடனடியாக தெரிவிக்கவும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.அதேபோல் ரேஷன் கடைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6,970 ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் இயங்க ஏதுவாக புதிய கட்டிடம் அமைக்க தேவையான முறையான இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனால் விரைவில் ரேஷன் கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க சுலபமான வழிமுறைகள் இவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's