Homeதமிழ் Newsஆரோக்கியம்Robo Shankar Meets Kamal Haasan Picture Goes Viral On Social Media |...

Robo Shankar Meets Kamal Haasan Picture Goes Viral On Social Media | ரோபோவுக்கு உலகநாயகன் கொடுத்த முத்தம் வைரலாகும் புகைப்படம்


விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரோபோ சங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக பேசியும், அவரைப் போல் பாடி லாங்குவேஜ் செய்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தொடர்ந்து விஜய் டிவியில் நடந்த மற்ற சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்துடன் விஸ்வாசம் மற்றும் இதர முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது என படு பிஸியாக இருக்கிறார்.

மேலும் படிக்க | ’மெஹந்தியில் கூட காதல்’ விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்பிரைஸ்

இதற்கிடையே ரோபோ சங்கரின் மகளும் பிகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் ரோபோ சங்கர் தீவிரமான கமல் ஹாசனின் ரசிகர் ஆவார். இதுதொடர்பாக பொதுவெளியிலும் ரோபோ சங்கர், தான் ஒரு கமலின் தீவிரமான ரசிகர் என  கூறியுள்ளார்.

இந்நிலையில் ரோபோ சங்கரை காண வேண்டுமென கமல் ஹாசனிடமிருந்து அழைப்பு சென்றிருக்கிறது. இந்த அழைப்பை சற்றும் எதிர்பார்க்காத ரோபோ சங்கர் ஆழ்வார்ப்பேட்டைக்கு சென்று கமலை சந்தித்திருக்கிறார்.

 

அப்போது ரோபோ சங்கருக்கு கமல் ஹாசன் முத்தம் கொடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட படம்  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | ’புஷ்பா’ நாயகனை இயக்கும் பிரபல தமிழ் இயக்குநர் – அறிவிப்பு விரைவில்

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் கடந்த மூன்றாம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கும் விக்ரம் இதுவரை உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து வெற்றிகரமாக திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மாநாடு கூட்டியவருடன் இணையும் சிவகார்த்திகேயன்?… உற்சாகத்தில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read