Thursday, December 2, 2021
Homeசினிமா செய்திகள்Sanjana Natarajan thanks to Dancing Rose actor Shabeer - தமிழ் News

Sanjana Natarajan thanks to Dancing Rose actor Shabeer – தமிழ் News


sanchananatarajan2682021m

முதல்முறையாக எதையாவது செய்யும் போது ஏற்படும் சந்தோசத்தை ஒப்பிடவே முடியாது என்று கூறி ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்த ஷபீருக்கு நன்றி கூறி தனுஷ் பட நாயகி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நாயகி சஞ்சனா நடராஜன் என்பது அனைவரும் தெரிந்ததே. குறிப்பாக அவர் தனுஷுடன் ’ரகிட ரகிட’ என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதேபோல் சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா பரம்பரை திரைப்படத்திலும் லட்சுமி என்ற கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sanchananatarajan2682021m1

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சஞ்சனா நடராஜன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் அலைச்சறுக்கு பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதில் அவர் அலைகளின் நடுவே பயிற்சி செய்யும் காட்சிகள் உள்ளது என்பதும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

rose230721 1

இந்தநிலையில் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு கேப்ஷனாக ’எதையாவது முதல் முறையாக செய்யும் போது ஏற்படும் சந்தோசத்தை ஒப்பிட முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு தன்னை ஊக்கப்படுத்திய நடிகர் ஷபீருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ஷபீர் ’சார்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்தவர் என்பது தெரிந்ததே.

file





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Bollywood actor akshay kumar retweets to indonesian youtuber sooryavanshi song na jaa recreated...

नई दिल्ली. अक्षय कुमार (Akshay Kumar) के सितारे इन दिनों बुंलदियों पर हैं. उनकी फिल्म ‘सूर्यवंशी’ (Sooryavanshi) बॉक्स ऑफिस पर सुपरहिट साबित हुई...