Seeru Movie Review: ஜீவாவுக்கு ஜாலி டைம் , சீறு படம் மூலம் கிளாஸ் மற்றும் மாஸ் காட்டுகிறார் | seeru movie review

0
40
Seeru Movie Review: ஜீவாவுக்கு ஜாலி டைம் , சீறு படம் மூலம் கிளாஸ் மற்றும் மாஸ் காட்டுகிறார் | seeru movie review


bredcrumb

Reviews

oi-Vinoth R

|

Rating:

3.5/5

Star Cast: ஜீவா, ரியா சுமன், சதீஷ், நவ்தீப், வருண்

Director: ரத்தின சிவா

Seeru Emotional Hit | Jiiva | Riya Suman | D.imman

சென்னை : நடிகர் ஜீவா தமிழ் சினிமாவிற்கு எப்போது ரீஎன்ட்ரி கொடுப்பார் எப்போது அவருக்கு நல்ல படம் அமையும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கும் தருனத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் சீறு .முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கும் படம் தான் சீறு .

இயக்குனர் ரத்னசிவா இயகத்தில் உருவாகி இருக்கிறது ,படத்தின் வெளியீட்டிற்கு முன் ரத்னசிவா தமிழ்சினிமாவின் சிறந்த கதை சொல்லும் இயக்குனர்களில் ஒருவர் அவர் கதை சொன்னால் கட்டாயம் ஹீரோக்கள் நடிக்க ஒத்துக்கொள்வாரகள். அந்த அளவுக்கு சிறப்பாக கதை சொல்லுவார் அதே நேரத்தில் சிறந்த இயக்குனரும் கூட என்று குறிப்பிட்டு கூறப்பட்டது .மேலும் விஜய்சேதுபதி இவர் இயக்கிய றெக்க படத்திற்கு பிறகு தான் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seeru movie review

தொடர் வெற்றிகளை தந்து வரும் தயாரிப்பாளரான ஐசரிகணேஷ் தயாரித்துள்ள இந்த படம் ,பெரும் எதிர்பார்பிலே வெளியாகி இருக்கிறது என்று கூறலாம் .சீறு படத்தில் ஜீவா ,ரியா சுமன் ,நவ்தீப்,வருன்,சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து இருக்கிறார் .டி பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் .லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

Seeru Movie Review: ஜீவாவுக்கு ஜாலி டைம் , சீறு படம் மூலம் கிளாஸ் மற்றும் மாஸ் காட்டுகிறார் | seeru movie review

ஜீவா ஒரு ஊரில் கேபிள் டீவி நடத்தி வருகிறார் .அவர் நினைத்ததை அந்த ஊர் மக்களுக்கு சொல்லும் அளவிற்கு அந்த கேபிள் டீவி வேலையை செய்து வருகிறார். அந்த ஊரின் அரசியல்வாதி செய்யும் தவறினை தனது கேபிள் டீவியின் மூலம் மக்களுக்கு எடுத்து செல்கிறார்.அங்கிருந்து பிரச்சினை ஜீவாவை நோக்கி உருவாகிறது. சென்னையில் இருந்து வில்லன் ரௌடிகளை இறக்கி ஜீவாவை கொள்ள திட்டமிடுகிறான்,மேலும் இதில் இருந்து ஜீவா தப்பித்தாரா வில்லனின் சதியை முறியடித்தாரா என்பதே சீறு படத்தின் மீதி கதை .

seeru movie review

இந்த படத்தில் எதிர்பாராத விதமாக நடிகர் வருண் வில்லனாக மிரட்டுகிறார் . நடிகர் வருன் தன்னுடைய சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.வருன் நடித்ததிலே சிறந்த படம் என்றால் சீறு படத்தை கூறலாம் .மேலும் படத்தின் பின்னனி இசை படத்தின் வேகத்திற்கு ஈடுகட்டும் அளவிற்கு இருந்தது .

முக்கியமாக ஸீநீக் பீக் ஒன்றில் வெளியிடபட்ட காட்சி படத்தோடு ஒன்றி வரும் போது ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே சென்று விட்டார்கள் என்று கூறலாம் .நடிகர் ஜீவாவுக்கும் வருனுக்கும் வரும் காட்சிகள் விருவிருப்பின் உச்சம் .

seeru movie review

படத்தின் கதை களம் பேசுவது பெண்களின் எழுச்சி பற்றி தான் இருந்தும் வசனங்கள் வாயிலாக இன்னும் சரியான முறையில் கொடுத்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து . மேலும் படத்திற்கு இருக்கும் பெரிய பலம் என்றால் திரைக்கதை தான் சடசட என்று அடுத்த அடுத்த காட்சிகள் நகர்கின்றன இப்படி கதை செல்லும் போது எதையாவது விட்டு விடுவார்களோ , லாஜிக் மிஸ்டேக்ஸ் வருமோ என்று எதிர் பார்த்தால் , அப்படி எந்த பெரிய தவறும் செய்யாமல் இயக்குனர் மிகவும் சாமர்த்தியமாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.

seeru movie review

மேலும் படத்தில் ஜீவா தனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் .அவருக்கு ஒரு ரீஎன்ட்ரி படமாக கட்டாயம் சீறு படம் அமைந்திருக்கிறது .மேலும் இந்த படத்தில் பல கமர்ஷியல் விஷயங்கள் இருந்தாலும் படம் நல்ல கருத்தையும் அதே நேரத்தில் லாஜிக்கான சில விசயங்களையும் ஏற்று எடுக்கபட்டிருக்கிறது . அந்த விதத்தில் ரத்னசிவா இந்த படத்தை சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம் .

seeru movie review

மேலும் இந்த படத்தில் ரத்ன சிவா பல முக்கிய விஷயங்களை கதையின் உள்ளே வைத்திருக்கிறார்.பெண்கள் தானே என இழிவு காட்டும் பலருக்கு இந்த படத்தின் பல காட்சிகள் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரத்னசிவா .முக்கியமாக கோலிசோடா படத்தில் நடித்த சாந்தினி இந்த படத்திலும் ஒரு தைரியமான பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தை பெற்றுள்ளார். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக அந்த கதாபாத்திரம் நம் மனதை மிகவும் பாதிக்கும்.

மொத்தத்தில் இந்த படத்தை பொருத்தவரையில் திரைக்கதையில் தான் பலம். சில இடங்களில் கதை களமும் எடுக்க பட்ட விதமும் படத்தை வேறு லெவலுக்கு எடுத்து செல்கிறது . மைனஸ் என்று எதுவுமே இல்லையா என்று கேட்டால் ? கண்டிப்பா இருக்கு . இந்த படத்தில் ஹீரோயின் வந்தார், நின்றார், சென்றார். அவருடைய பங்கு மிக மிக குறைவு. இருந்தாலும் படத்தின் சுவாரஸ்யமான காட்சிகள் அந்த சம்பவங்களை மறக்க வைக்கிறது.

seeru movie review

சீறி பாய்ந்து சீலிர்க்க வைக்கும் ஜீவா கண்டிப்பாக இந்த படத்தில் நம்மை சந்தோஷ படுத்துவார். பெண்கள் பார்க்க வேண்டிய படமாகவும் குறிப்பாக இளம் பெண்கள் தங்களது தயிரியம் , விவேகம் போன்ற விஷங்களை அலசி பார்க்கும் ஒரு நல்ல படம் தான் சீறு.

படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் எக்சிகியூடிவ் ப்ரடுயூசெர் அஸ்வின் மிக சிறப்பாக விளம்பரங்கள் செய்து ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் படத்தை அதிர விட்டு இருக்கிறார்கள். செவ்வந்தியை பாடல் ஒவ்வொரு டிவி சேனலில்லும் ரிப்பீட் மோடு தான். பலருக்கு காலர் ட்யுனாக மாறி அசதி கொண்டு இருக்கிறது.

seeru movie review

காட்சிகளின் விறுவிறுப்பு , போர் அடிக்காமல் ஜோராக இருப்பதினால் சீறு படுத்திற்கு நல்ல ஸ்கோர் கிடைத்து உள்ளது. கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய நல்ல என்டர்டெய்னிங் படம்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here