Home Sports விளையாட்டு செய்திகள் Sexual harassment of a schoolgirl; Karate master, school governor arrested | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் கைது

Sexual harassment of a schoolgirl; Karate master, school governor arrested | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் கைது

0
Sexual harassment of a schoolgirl; Karate master, school governor arrested | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் கைது

[ad_1]

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கருமந்துறையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் இருந்த போது, பிளேடால் தனது கையை அறுத்து கொண்டு, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று மாணவியை பத்திரமாக மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பலமுறை விசாரித்தும் மாணவி தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் குறித்து தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். அவருக்கு பல்வேறு முறை கவுன்சிலிங் அளித்த பின்னர், அவர் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அவர் படித்து வந்த பள்ளியில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா, தியான பயிற்சி வகுப்பின் போது அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்  (Sexual Abuse) ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ | திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை

4 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் சீண்டலால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார். ஆசிரியரின் நடவடிக்கையை முதலில் தவறாக கருதாத அந்த மாணவியிடம், கராத்தே மாஸ்டரின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இது குறித்து பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடமும் மாணவி புகார் தெரிவித்துள்ளார். ஆனால், மாணவியின் புகாரை உதாசினப்படுத்திய தாளாளர், ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கருமந்துறை காவல்துறையினர் இது தொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் ஆசிரியரின் சீண்டல் குறித்த தகவல் ஊர் முழுவதும் பரவி, அவர்களே ஆசிரியரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், நேராக காவல்நிலையத்துக்கும் அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, கராத்தே மாஸ்டரை கைது செய்த காவல்துறையினர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் ஸ்டீபன் ராஜையும் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ (POCSO act) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

READ ALSO | போக்சோ சட்டம் சொல்வது என்ன? குழந்தை உரிமைகள் அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here