Homeசினிமா செய்திகள்Silambarasan: போடு வெடிய.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மாஸ் அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! -...

Silambarasan: போடு வெடிய.. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மாஸ் அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! – vendhu thanindhathu kaadu movie latest update


‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைவதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக இந்தப்படத்திற்காக காத்து வருகின்றனர்.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ள கெளதம் மேனன், தற்போது சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் முத்து என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு முன்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. இந்தப்படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடை குறைத்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அண்மையில் வெளியான இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

tamil samayamகோபத்தில் மேடையிலிருந்து மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: ஷாக்கான ஏ.ஆர். ரஹ்மான்.!
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் முதல் பாடல் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி சுந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து ‘பத்து தல‘ படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

“காத்து வாக்குல ரெண்டு காதல்” கொண்டாட்டம்..!



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds