Homeதமிழ் Newsஆரோக்கியம்Simbu to pair up with his EX Girlfriend Hansika Motwani | சிம்புவுடன்...

Simbu to pair up with his EX Girlfriend Hansika Motwani | சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி


சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி அதிகப்படியான நேர்மறை விமர்சனங்களை பெற்ற மாநாடு (Maanaadu) படம், ரிலீஸ் ஆவதில் நிறைய சிக்கல்களை சந்தித்தது. ஒரு வழியாக அனைத்து போராட்டங்களையும் கடந்து இந்த படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.  ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் ரிலீசான இரண்டே நாட்களில் ரூ.14 கோடி வசூல் செய்து சாதனையை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது சிம்பு (Simbu) வெந்து தணிந்தது காடு உட்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ALSO READ | அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்?

இந்த நிலையில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.  இந்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா (Hansika) நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சிம்பு மற்றும் ஹன்சிகா வாலு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இதன் பிறகு இவர்கள் இருவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகா ஆகும். இந்தப் படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ஆகும். மேலும் மகா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக்கில் ஜாக்கிசான் நடிக்கிறாரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read