Homeதமிழ் Newsஆரோக்கியம்Sivakarthikeyan Don Movie Trailer Released | அரசியலுக்கு போலா வெளியானது டான் படத்தின் ட்ரைலர்

Sivakarthikeyan Don Movie Trailer Released | அரசியலுக்கு போலா வெளியானது டான் படத்தின் ட்ரைலர்


அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டான்’.  லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.  டாக்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன்-பிரியங்கா அருள் மோகன் ஜோடி இணைந்து நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்தின் மூலம் ஷிவாங்கி நடிகையாக புதிய பரிமாணத்தில் களமிறங்கி இருக்கிறார், இதில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பாலா, சூரி, ஆர்ஜே.விஜய், முனீஷ்காந்த் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

don

மேலும் படிக்க | விஜய் வந்தால் மட்டும் போதும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்!

அனிருத் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் வெளியீடு பல நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு தற்போது படத்தின் வெளியீட்டிய இறுதி செய்யப்பட்டு, படம் மே மாதம் 13ம் தேதி வெளியாகவிருக்கிறது.  டாக்டர் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மதிப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்துள்ள நிலையில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.  படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

don

டிரைலரின் மூலம், இப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாகவும், கல்லூரி மாணவனாகவும் நடித்திருப்பது தெரிய வருகிறது.  கல்லூரி கதையம்சம் கொண்ட படம் என்பதால் இதில் பல நகைச்சுவைகள் உள்ளது, அதோடு வழக்கம்போல சிவகார்த்திகேயனின் நகைச்சுவையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக தெரிகிறது.  ஒரு வகுப்பில் லாஸ்ட் பெஞ்ச் மாணவன் செய்யும் சேட்டைகள், சாதாரண கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் என இப்படம் அமைந்திருப்பது டிரைலரின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

மேலும் படிக்க | சினிமாவில் கமல் கணக்கு தப்பாக போகுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read