Homeசினிமா செய்திகள்Sivakarthikeyan next movie heroine officially announced - தமிழ் News

Sivakarthikeyan next movie heroine officially announced – தமிழ் News


sk210322 2

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிவகார்த்திகேயனின் 20வது படமான இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார் என்பதையும் பார்த்தோம்

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மரியா என்ற உக்ரைன் நாட்டின் நடிகை முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரடொக்சன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

sk210322 1

மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி வில்லனாக நடித்து வருவதாகவும் ராஷி கண்ணா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டதை அடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

274744676 1124949818319166 8369771720610613329 n

தமன் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை, புதுவை மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds