Home சினிமா செய்திகள் Sivakarthikeyan next movie with Nelson – தமிழ் News

Sivakarthikeyan next movie with Nelson – தமிழ் News

0
Sivakarthikeyan next movie with Nelson – தமிழ் News

[ad_1]

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டாக்டர்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தினை பார்த்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பதும் விமர்சகர்கள் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’டாக்டர்’ வெற்றியை அடுத்து நெல்சன் இயக்கி வரும் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் நெல்சனுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு நெல்சன் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் மீண்டும் சிவகார்த்திகேயன் – நெல்சன் கூட்டணியில் ஒரு வெற்றி படம் உறுதி என்றே கூறலாம்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here