Homeதமிழ் Newsஆரோக்கியம்Suriya shows Mass at OTT; 4 films to get released in a...

Suriya shows Mass at OTT; 4 films to get released in a OTT | OTT-யில் மாஸ் காட்டும் சூர்யா; தொடர்ச்சியாக 4 படங்கள் ரிலீஸ்


கொரோனா ஊரடங்கி காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் பெரிய படங்கள் தொடங்கி சிறிய படங்கள் வரை ஓடிடியில் வெளியாகி வருகிறது. சூர்யாவின் 2டி பேனர் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி ஒரு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. அதன் பிறகு சிறிய சிறிய படங்கள் வந்தாலும் சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடியில் ரிலீசாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் வலுவாக இறங்கியது. இனி சூர்யாவின் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறினார்கள். இதற்கிடைடில் நடிகர் சூர்யா மாஸ் காட்டும் வகையில் தனது அடுத்தடுத்த படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வர்கிறார். 

ALSO READ | Suriya’s Jai Bhim: ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம்

இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ஜெய் பீம் படம் இந்த வருடம் நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பற்றி கூறும் இப்படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். 

அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி அவரது தயாரிப்பில் உருவாகும் படங்களும் வரிசையாக அமேசான் பிரைமில் வெளியாகிறது. அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம், சரோ சண்முகம் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் நடிக்கும் ஓ மை டாக் திரைப்படம், இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் ஜோதிகா நடிக்கும் உடன்பிறப்பே திரைப்படமும் செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் ரிலீசாகிறது.

சூர்யா தனது நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகும் அடுத்தடுத்த நான்கு படங்களையும் ஓடிடியில் ரிலீஸ் செய்வதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்கின்றனர். 

 

 

 

 

நடிகர் சூர்யாவின் கிட்டார் கம்பி மேலே நின்று என்ற ஒரு ஆந்தாலஜி படமும் நாளை நெட்ஃபிக்ஸ் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Viral: தனது படத்தை மூக்கால் வரைந்த ரசிகரை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read