Homeசினிமா செய்திகள்Surya 40 movie firstlook on his birthday July 23rd - தமிழ் News

Surya 40 movie firstlook on his birthday July 23rd – தமிழ் News


சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இப்போதே அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் ஏற்பாடுகளில் உள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு செம விருந்து ஒன்று காத்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 40’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தில் சூர்யா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி ’சூர்யா 40’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் சூர்யா பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read