Thursday, October 28, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்Tamil Nadu Covid update 15759 new COVID cases 378 deaths 29243 recoveries...

Tamil Nadu Covid update 15759 new COVID cases 378 deaths 29243 recoveries in the last 24 hours | TN COVID-19 Update: 16,000-க்கு கீழ் இறங்கியது ஒரு நாள் தொற்றின் அளவு, 378 பேர் உயிர் இழப்பு


சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 15,759 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,24,597 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 378 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 240 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 138 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 28,906 -ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,74,802 ஆக உள்ளது. 

தமிழகத்தில் இன்று 29,243 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 21,20,889 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மொத்தமாக 1,82,586 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 15,759 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8,769 ஆண்களும் 6,990 பெண்களும் அடங்குவர். 

ALSO READ: TN Lockdown: ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன?

இது தவிர தவிர அரியலூரில் 105 பேரும், செங்கல்பட்டில் 621, சென்னையில் 1094, கோயம்பத்தூறில் 2056, கடலூரில் 354, தர்மபுரியில் 251, திண்டுக்கல்லில் 207, ஈரொட்டில் 1365, கள்ளக்குறிச்சியில் 243, காஞ்சிபுரத்தில் 325, கன்னியாகுமரியில் 456, கரூரில் 158, கிருஷ்ணகிரியில் 288, மதுரையில் 283, நாகப்பட்டினத்தில் 482, நாமக்கல்லில் 434, நீலகிரியில் 419, பெரம்பலூரில் 96, புதுக்கோட்டையில் 159, ராமநாதபுரத்தில் 125, ராணிப்பேட்டையில் 249, சேலத்தில் 916, சிவகங்கையில் 117, தென்காசியில் 198,  தஞ்சாவுரில் 656, தேனியில் 212, திருப்பத்தூரில் 176, திருவள்ளூரில் 402, திருவண்ணாமலையில் 298, திருவாரூரில் 272, தூத்துக்குடியில் 338, திருநெல்வேலியில் 231, திருப்பூரில் 853, திருச்சியில் 439, வேலூரில் 207, விழுப்புரத்தில் 383, விருதுநகரில் 290 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த 21 நாட்களாக தமிழகத்தில் (Tamil Nadu) தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 16,000-க்கும் கீழ் வந்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 14 வரை அமலில் உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தற்போது தளர்வுகளற்ற உரடங்கு (Lockdown) அமலில் உள்ளது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் (Lockdown) சில தளர்வுகள் இந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் மேலும் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் கொரோனா ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.  

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் அலை தீயாய் பரவத் தொடங்கிய நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற நாள் முதலே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ALSO READ: vaccines: தமிழகத்திற்கு இன்று 3.65 லட்சம் தடுப்பூசி கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Rashmika Mandanna: షూటింగ్ సెట్‌లో అబ్బాయిలంతా ఇంతే.. రష్మిక మందన్నా పోస్ట్ వైరల్ – rashmika mandanna...

రష్మిక మందన్నా, శర్వానంద్ ప్రస్తుతం రాజమండ్రిలో ఉన్నారు. ఆడవాళ్లు మీకు జోహార్లు అనే సినిమా షూటింగ్ సెట్‌లో సందడి చేస్తున్నారు. తాజాగా షాట్ అయిపోయిన తరువాత శర్వా, డైరెక్టర్ బిజీగా ఉన్నారంటూ...