Homeசினிமா செய்திகள்Thalapathy Co Star Dance tribute to birthday wishes - தமிழ் News

Thalapathy Co Star Dance tribute to birthday wishes – தமிழ் News


தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து அவருடன் நடித்த நடிகர்-நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் அவரது பாடலுக்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக விஜய்யுடன் ’பைரவா’ ’சர்கார்’ போன்ற படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் நடித்த ’யூத்’ படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’பிகில்’ படத்தில் அவருடன் நடித்த அமிர்தா ஐயர், கீர்த்தி சுரேஷ் போன்றே, விஜய் பாடலுக்கு நடனம் ஆடி தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலின் இசைக்கு நடனமாடி தளபதி விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அம்ரிதா கூறியுள்ளார். அம்ரிதாவின் இந்த டான்ஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read