Homeதமிழ் Newsஆரோக்கியம்Thalapathy67 Update After Varisu Vijay Doing Another Film With Lokesh kanagaraj |...

Thalapathy67 Update After Varisu Vijay Doing Another Film With Lokesh kanagaraj | Thalapathy67 Update வாரிசுக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் வெளியான தகவல்


வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வாரிசு‘ படத்தின் முக்கியமான காட்சிகளில் தற்போது விஜய் நடித்து முடித்திருக்கிறார்.  குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜீவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஷியாம், குஷ்பு, ஜெயசுதா, சம்யுக்தா கார்த்திக், சங்கீதா க்ரிஷ், யோகி பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், விஜய் ரசிகர்கள் பலரும் வாரிசு படத்தை காட்டிலும் ‘தளபதி 67’ படத்தை தான் ஆர்வமாக எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க | நெட்பிளிக்ஸ் மீது ஆர்ஆர்ஆர் இயக்குநர் ராஜமௌலியின் கோபம்

ஏனென்றால் ‘தளபதி 67’ விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகப்போவதாக நீண்ட காலமாக செய்திகள் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.  ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் நல்ல வெற்றியை பெற்றது, அதனை தொடர்ந்து சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது மிரட்டலான நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படம் பிளாக்பாஸ்டர் ஹிட்டடித்தது.  இதனால் ரசிகர்கள் பலரும் இயக்குனர் லோகேஷை கொண்டாடி வருகின்றனர், இந்த சமயத்தில் மீண்டும் இவர் தளபதியுடன் கூட்டணி வைக்கப்போவதாக கூறப்படும் செய்திகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் விஜய்யுடன் இணைவது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.  அவர் கூறுகையில், ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை கொண்டாடிய பின்னர் நான் அடுத்த படத்திற்கான கதையை உருவாக்க ஆரம்பித்துவிட்டேன், இந்த செயல்முறையை நான் தொடங்கி கிட்டத்தட்ட பத்து நாட்கள் இருக்கும்.  தயாரிப்புக்குழு தரப்பில் இருந்து படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் முதலில் வெளிவந்தால் மட்டுமே நான் எதாவது சொல்லமுடியும், அவர்கள் படத்தை பற்றி சொல்லாதவரை என்னால் எதுவும் சொல்லமுடியாது.  மேலும் விஜய் சார் தற்போது ‘வாரிசு’ படத்தில் பிசியாக இருக்கிறார், அது முடிந்த பிறகு தான் அடுத்தகட்ட வேலையை தொடங்கமுடியும் என்று கூறியுள்ளார்.  லோகேஷின் இந்த பேட்டி விஜய் ரசிகர்களிடையே மென்மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வாரிசு படப்பிடிப்புக்காக வரிசையில் சென்ற விஜய்யின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read