Home தமிழ் News ஆரோக்கியம் The fabulous official update for Suriya 40 landed and it goes viral | Suriya 40: நடிகர் சூர்யாவின் #Suriya40 பட அப்டேட் இணையத்தில் வைரல்

The fabulous official update for Suriya 40 landed and it goes viral | Suriya 40: நடிகர் சூர்யாவின் #Suriya40 பட அப்டேட் இணையத்தில் வைரல்

0
The fabulous official update for Suriya 40 landed and it goes viral | Suriya 40: நடிகர் சூர்யாவின் #Suriya40 பட அப்டேட் இணையத்தில் வைரல்

[ad_1]

சென்னை: சூரியா 40 திரைப்படம் தொடர்பான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் தமிழ் திரையுலகையே கலக்குகிறது. சமூக ஊடகங்களில் வெளியான அப்டேட் வைரலாகிறது!

நடிகர் சூரியா தற்போது பல திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். நவரசா, வெப்சீரிஸிலும் நடிகர் சூர்யா நவரசம் காட்டுகிறார்.  பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கும் இந்த வலைத்தொடரை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் திரைப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் வெற்றி மாறனின் வாடிவாசல் மற்றும் இயக்குனர் பாண்டிராஜின் படம் என பல முக்கியமான படங்களிலும் சூர்யா நடிக்கிறார். 

பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்திற்கு இதுவரை பெயர் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், தற்காலிகமாக சூரியா 40 என குறிப்பிடப்படுகிறது.

Also Read | இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரியங்கா அருள் மோகன், இந்த படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். திரைப்படத்தில் சூரியாவின் தோற்றம் வெளியாகி, அவரது அன்பான ரசிகர்களின் நெஞ்சை கொள்ளைக் கொண்டுள்ளன.  

சூரியாவின் வெகுஜன அவதாரத்தை திரைப்படத்தில் தவறவிட முடியாது என்பதை உணர்த்துகிறது ஒரு புகைப்படம். குறிப்பாக நடிகர் சூர்யா நமது முதுகை காட்டிக் கொண்டிருக்கும் படத்தில் அவர் ஒரு வாளை இழுத்துச் செல்கிறார். 

எனவே இந்த படத்தின் தலைப்பு அனைவருக்கும் தனித்துவம் வாய்ந்ததாக  இருக்கும் என்று இயக்குனர் ஏற்கனவே அறிவித்திருந்தார். திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்டை ஜூலையில் வெளியிடுமாறு கூறிய பாண்டியராஜன், அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்!

இப்போது, திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது சமூக ஊடக பக்கத்தில் ரசிகர்களுக்கு சுவராஸ்யமான தகவலை அளித்துள்ளார், படத்தின் அடுத்தகட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்யும் தான் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக ரத்னவேலு தெரிவித்துள்ளார். 

Also Read | மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறேன்- நடிகர் வடிவேலு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here