Homeதமிழ் Newsஆரோக்கியம்The huge amount spent for the fight scene of actor Karthi’s Sardar...

The huge amount spent for the fight scene of actor Karthi’s Sardar movie | பாராளுமன்றத்தில் நடைபெறும் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு


நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார்’. அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், ஒரே சண்டைக் காட்சிக்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலேயே நடைபெறுவதுபோன்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக அசர்பைசான் அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு காட்சிகள் நடத்தப்பட்டன. 

மேலும் படிக்க | மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தர்

Sardar

இந்தப் படத்தில் வில்லனாக சிங்கி பாண்டே நடிக்கிறார். அவருடன் மோதும் காட்சிகள் தான் அசர்பைசான் பாராளுமன்ற வளாகத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அசர்பைசான் பாராளுமன்றம் மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் தயாரிப்பு நிறுவனம் சுமார் 4 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது. முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் சென்னை திரும்பிய படக்குழு அடுத்தக்கட்டப் படிப்பிடிப்புகளை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.

Karthi sardar Movie

கார்த்தியின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இரும்புத் திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ரஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கார்த்தி இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். வயதான தோற்றத்திலும், காவல்துறை அதிகாரியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

மேலும் படிக்க | 100 கோடி 200 கோடிலாம் வேணாம்; ஸ்ட்ரைட்டா 400 கோடிதான்! வெறித்தன வசூலில் விக்ரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

ரன்வே 34 எழுத்தாளர், அக்ஷய் குமாரின் ஸ்கைஃபோர்ஸில் சந்தீப் கெவ்லானி; படம் ஜனவரி 2023 இல்...

அக்ஷய் குமார், முதல் முறையாக தினேஷ் விஜனுடன் இணைந்துள்ளதால், விமானப்படை சார்ந்த படத்திற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், இந்த ஒத்துழைப்பைச் சுற்றி அறிக்கைகள்...