Homeசினிமா செய்திகள்The important information about karthi lokesh kanagaraj sr prabhu in kaithi 2...

The important information about karthi lokesh kanagaraj sr prabhu in kaithi 2 – தமிழ் News

kaithi2 11062022m

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கினார். அதன்பின் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கினார்

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது மீண்டும் அவருக்கு விஜய் நடிக்க உள்ள ’தளபதி 67’ படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ்க்கு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் ‘கைதி 2’ படம் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த தகவலின்படி ’தளபதி 67’ படம் முடிந்தவுடன் ‘கைதி 2’ தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனவே அடுத்த ஆண்டு இறுதியில் ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

kaithi2 11062022m1

ஏற்கனவே சமீபத்தில் பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ் ‘கைதி ’ திரைப்படத்தில் கார்த்தி, ஒரு கட்டப்பையுடன் சென்று கொண்டிருப்பார் என்றும் அதில் அவர் வாங்கிய கோப்பைகள் இருக்கும் என்றும் அவர் ஒரு கபடி விளையாட்டு வீரர் என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல் அர்ஜூன் தாஸ் கேரக்டர் கொலை செய்யப்படவில்லை என்றும் ஒரு சஸ்பென்ஸை உடைத்தார்.

எனவே ‘கைதி 2’ படத்தில் அடுத்த முதல் பாகத்தை விட இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவின் வலைத் தொடரின் தொகுப்பாளராக கரண் ஜோஹரை மாற்ற ரன்வீர் சிங் மாட்டார்

பிக் பாஸ் OTT தற்போது ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திட்டங்களில் ஒன்றாகும். முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரைக் கொண்டிருந்தது கரண் ஜோஹர் பிக்...