Homeதமிழ் Newsஆரோக்கியம்Thiruchitrambalam Movie Dhanush Character Video Released | திருச்சிற்றம்பலம்

Thiruchitrambalam Movie Dhanush Character Video Released | திருச்சிற்றம்பலம்


தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் தன்மை உடையவர். கோலிவுட்டில் அறிமுகமாகி ஹாலிவுட்வரை சென்றிருக்கும் தனுஷ் தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

ஆனால் அவர் கடைசியாக நடித்த ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு – கலந்துகொண்ட முதலமைச்சர்

இதில் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் தனுஷுடன் நடித்துள்ளனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது.

 

இதற்கிடையே விரைவில் படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரியா பாவனி சங்கர், ரஞ்சனி கதாபாத்திரத்திலும், ராஷி கண்ணா அனுஷா கதாபாத்திரத்திலும், நித்யா மேனன் ஷோபனா கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான போஸ்டர்கள் வெளியாகின.

 

அதேபோல் பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்திலும், பிரகாஷ் ராஜ் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான மோஷன் போஸ்டர்களும் வெளியாகின.

 

இந்நிலையில் படத்தில் தனுஷின் கேரக்டர் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனுஷ் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Cryptoverse: With NFT Market Moving Towards Collapse, Experts Weigh What Lies Ahead

The NFT dream isn't dead, but it's taken a big non-fungible beating. The market shone gloriously last year as crypto-rich speculators spent billions...